Team India: ரோஹித், கோலியின் அடுத்த ஆட்டங்கள் எப்போது..? பார்முக்கு திரும்புவார்களா..?
Kohli-Rohit Upcoming Match: பே ஓவல் மைதானத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா 3-1 ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அடுத்ததாக, 2026 நவம்பர் 19 முதல் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரிலும், டிசம்பர் 13 முதல் இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரிலும் இந்தியா மோதவுள்ளது. கோலி-ரோஹித்தின் அடுத்த சர்வதேசப் போட்டி இவை.
பே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 5வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, 5 போட்டிகள் கொண்ட தொடரை (IND vs NZ) இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மூன்றாவது போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. நான்காவது போட்டியில் நியூசிலாந்து 244 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதே மைதானத்தில் நேற்று அதாவது 2026 நவம்பர் 15ம் தேதி நடைபெற்ற 5வது போட்டியில், இந்தியா 209 ரன்களை வெற்றிகரமாகப் பாதுகாத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி (Virat Kohli) மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இரு ஜாம்பவான்களும் ஒருநாள் வடிவத்தில் பிரத்தியேகமாக இந்தியாவுக்காக விளையாடுவதால், அவர்களின் ரசிகர்கள் அடுத்த ஒருநாள் தொடரை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ALSO READ: 13 ஆண்டுகளுக்குப் பிறகு.. இரட்டை இலக்க ரன்கள் எடுக்க முடியாமல் திணறும் கோலி!
இந்தியாவும் நியூசிலாந்தும் இப்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன. இதன் முதல் போட்டி வருகின்ற 2026 நவம்பர் 19ம் தேதி தொடங்குகிறது. 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமானது. இதனை அனைத்து ரசிகர்களும் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் இந்தியா திரும்புவார்கள்.




இந்தியாவின் அடுத்த ஒருநாள் போட்டி எப்போது?
இந்தியாவின் அடுத்த ஒருநாள் தொடர் இலங்கைக்கு எதிராக வருகின்ற 2026 டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இந்தத் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டி வருகின்ற 2026 டிசம்பர் 13ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இதன் மூலம், இது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் அடுத்த சர்வதேசப் போட்டியாக அமையும்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி வருகின்ற 2026 டிசம்பர் 16ம் தேதி பெங்களூருவில் எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும். 3வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும். நியூசிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகள் இந்திய நேரப்படி காலை 7:30 மணிக்குத் தொடங்கின. இலங்கைக்கு எதிரான தொடரின் அனைத்துப் போட்டிகளும் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கும்.
ALSO READ: பவுலிங்கில் இந்திய அணி பக்கா மாஸ்.. நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிராக ரோஹித் – கோலியின் செயல்பாடு எப்படி இருந்தது?
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிrல் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஆட்டம் மோசமாக இருந்தது. ரோஹித் 2 முறை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இரண்டாவது போட்டியில் 23 ரன்களும், நேற்று அதாவது 2026 நவம்பர் 15ம் தேதி 7 ரன்களும் எடுத்தார். இதன் மூலம், ரோஹித் நான்கு இன்னிங்ஸ்களில் மொத்தமாக 30 ரன்கள் மட்டுமே எடுத்தார். விராட் கோலி முதல் போட்டியில் அரைசதம் (74) அடித்தார், ஆனால் அதன் பிறகு, அவரால் மொத்தமாகவே 3 இன்னிங்ஸ்களில் 12 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.