WPL 2027: பிரபோர்னிலிருந்து வான்கடேக்கு மாறிய போட்டிகள்.. WPL 2027ல் திடீர் இடமாற்றத்திற்கு காரணம் என்ன?
WPL 2027 Venue Change: 2027 மகளிர் பிரீமியர் லீக் லீக் சுற்றுப் போட்டிகள் பிரபோர்ன் ஸ்டேடியத்திலிருந்து மும்பையின் வான்கடே ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. சர்வதேச ஐசிசி போட்டிகள் காரணமாகவும், மைதானத் தயாரிப்பு விதிகளாலும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போட்டி தேதிகள் மற்றும் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது.
2027 மகளிர் பிரீமியர் லீக்கின் (WPL 2027) லீக் சுற்று போட்டிகள், சர்வதேச போட்டிகள் காரணமாக இந்திய கிரிக்கெட் கிளப்பின் பிரபோர்ன் ஸ்டேடியத்திற்கு பதிலாக இனி வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ (BCCI) தெரிவித்துள்ளது. மேலும், போட்டி நடைபெறும் இடம் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது என்றும், தேதிகளிலோ அல்லது போட்டி அட்டவணையிலோ எந்த மாற்றமும் இல்லை என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் பிரீமியர் லீக் நிர்வாகக் குழுவானது கடந்த 2026 செப்டம்பர் 15 அன்று நடைபெற்ற தனது கூட்டத்தில், மகளிர் பிரீமியர் லீக் 2027 பதிப்பிற்கான போட்டி நடைபெறும் இடங்களையும், போட்டியின் தேதிகளையும் அங்கீகரித்தது.
அதன்படி, லீக் சுற்றின் 12 முதல் 20 வரையிலான போட்டிகள், தகுதி நீக்கப் போட்டி மற்றும் பைனல் ஆகியவை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தன. இருப்பினும், ஐசிசியின் போட்டி அட்டவணை காரணமாக, போட்டி நடைபெறும் இடம் வான்கடே மைதானத்திற்கு மாற்றப்பட்டது.




ALSO READ: வரலாற்றில் முதல் பெண் வீராங்கனை..ஜெய்ப்பூர் நஹர்கர் கோட்டையில் ஹர்மன்பிரீத் கவுர் சிலை..!
மகளிர் பிரீமியர் லீக் எப்போது முதல் தொடங்குகிறது..?
🚨 𝗔𝗻𝗻𝗼𝘂𝗻𝗰𝗲𝗺𝗲𝗻𝘁 🚨
Wankhede Stadium to host Mumbai leg of #TATAWPL 2027 instead of CCI’s Brabourne Stadium 🏟️
The dates and fixtures will remain unchanged.
All details 🔽
https://t.co/6Pa5H4GHr0
— Women’s Premier League (WPL) (@wplt20) November 15, 2026
ஐசிசி மகளிர் சாம்பியன்ஸ் டிராபியின் முதல் பதிப்பு, 2027 பிப்ரவரி 14 முதல் பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மகளிர் பிரீமியர் லீக் முடிவதற்கும் இந்த சர்வதேச போட்டித் தொடர் தொடங்குவதற்கும் இடையிலான காலம் மிகவும் குறைவாக இருப்பதால், பிட்ச்களை மீண்டும் தயார் செய்வதற்குப் போதுமான நேரம் இருக்காது. திட்டமிட்டபடி இந்தப் போட்டிகள் பிரபோர்ன் மைதானத்தில் நடத்தப்பட்டிருந்தால், பிசிசிஐ ஐசிசி விதியை மீறியிருக்கும். தற்போது, இந்தப் பிரச்சினை, போட்டி நடைபெறும் இடத்தை மாற்றுவதன் மூலம் சரிசெய்யப்பட்டது. முக்கியப் போட்டிகளுக்காக ஒரு ஸ்டேடியத்தை தயார் நிலையில் வைத்திருக்க 15 நாட்கள் இடைவெளி வேண்டும் என்ற ஐசிசியின் விதிகளில் உள்ளது.
பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டதாக பிசிசி தெரிவித்துள்ளது. டபிள்யூபிஎல் குழு இந்த மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ALSO READ: வெளியான WPL 2027 அட்டவணை.. முதல் போட்டியில் மோதும் மும்பை – பெங்களூரு!
மகளிர் பிரீமியர் லீக்கின் 5வது பதிப்பு 2027ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி வருகின்ற 2027 ஜனவரி 14ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி வதோதராவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. முதல் 11 போட்டிகள் வதோதராவில் (கோட்டாம்பி, பிசிஏ ஸ்டேடியம்) நடைபெறும். 2027 ஜனவரி 26 ஆம் தேதி முதல், அனைத்துப் போட்டிகளும் வான்கடே மைதானத்தில் நடைபெறும். தகுதிச்சுற்றுப் போட்டி 2027 பிப்ரவரி 5 ஆம் தேதியும், 2027 இறுதிப் போட்டி பிப்ரவரி 7ம் தேதியும் வான்கடே மைதானத்திலேயே நடைபெறும்.