AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இனி 75% அல்ல 85%.. நகைக் கடனில் ஆர்பிஐ மேற்கொண்ட முக்கிய மாற்றம்!

RBI Increases LTV to 85 Percentage | தங்க நகைகளை வைத்து கடன் வாங்கும் பழக்கம் இந்தியர்கள் மத்தியில் பரவலாக உள்ளது. இந்த நிலையில் தான், தங்க நகைக் கடன் வாங்குவது குறித்த புதிய விதிகளை ஆர்பிஐ அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இனி 75% அல்ல 85%.. நகைக் கடனில் ஆர்பிஐ மேற்கொண்ட முக்கிய மாற்றம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 15 Nov 2026 16:00 PM IST

திடீரென பண தேவை ஏற்பட்டால் பொதுமக்கள் நாடுவது வங்கி கடன்களை தான். இதற்காக வங்கிகள் பொதுமக்கள் தனிநபர் கடன் (Personal Loan), நகைக் கடன் (Gold Loan) ஆகியவற்றை வழங்கி வருகின்றன. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தங்க நகைகளை வாங்குகின்றனர். தங்க நகைக்கு குறைந்த வட்டி விதிக்கப்படுவதால் அவர்கள் தங்க நகையை தேர்வு செய்கின்றனர். இந்தியர்கள் மத்தியில் நகைக் கடன் அதிகரித்து வரும் நிலையில், அது குறித்த சில முக்கிய மாற்றங்களை இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், நகைக் கடன் குறித்து ஆர்பிஐ மேற்கொண்டுள்ள முக்கிய மாற்றங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நகைக் கடனில் ஆர்பிஐ மேற்கொண்ட முக்கிய மாற்றம்

ஆர்பிஐ அறிமுகம் செய்துள்ள புதிய விதிகளை இந்தியாவில் உள்ள வணிக வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள், கிராமப்புற வங்கிகள் என எல்லா வகையான வங்கிகளும் பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது.

தங்க நகைகளுக்கு 85 சதவீத கடன்

இதற்கு முன்னதாக வங்கிகள் தங்க நகைகளுக்கு 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்கப்பட்டது. அதாவது, தங்கத்தின் மொத்த மதிப்பில் இருந்து 75 சதவீதம் கடனாக வழங்கப்படும். ஆனால், தற்போது அதிக தொகையை கடனாக பெறும் புதிய விதிமுறையை ஆர்பிஐ அறிமுகம் செய்துள்ளது. அதாவது 75 சதவீதமாக இருந்த கடன் தொகை தற்போது 85 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : எகிறும் பட்ஜெட்.. திருமண செலவை அதிகரிக்கும் காரணங்கள்.. இந்த விஷயங்களில் கவனமாக இருக்கணும்!

உயர்த்தப்பட்ட தங்க நகைக் கடன் அளவு

உதாரணமாக ரூ.2.5 லட்சம் வரையிலான கடன் பெறும் நபர்களுக்கு, அவர்களின் தங்கத்தின் மதிப்பில் இருந்து 85 சதவீதம் வரை கடன் வழங்கப்படும். அதேபோல ரூ.5 லட்சம் வரை கடன் பெறும் நபர்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் தங்கத்தின் மதிப்பில் 80 சதவீதம் வரை கடன் வழங்கப்படும். மேலும் ரூ.5 லட்சத்திற்கு மேல் கடன் பெறும் நபர்களுக்கு அவர்களது தங்கத்தின் மதிப்பில் இருந்து 75 சதவீதம் வரை கடன் வழங்கப்படும்.

இதையும் படிங்க : 18K, 22K மற்றும் 24K.. இவை நான்கில் எது சிறந்தது.. எது உண்மையான தங்கம்!

திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள் மற்றும் ஏல விதிமுறைகள்

சில வங்கிகள் புல்லட் ரீபேமெண்ட் செய்யும் வசதியை வழங்குகின்றன. அதாவது, கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை வட்டியிலும், அசலிலும் வரவு வைப்பது ஆகும். இத்தகைய நகைக் கடன்களின் கால அளவு 12 மாதங்கள் ஆகும். ஒருவேளை வாடிக்கையாளர் தான் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் அந்த நகையை ஏலம் விடுவதற்கு முன்னதாக கடன் வாங்கியவருக்கு முறையாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

Follow Us