AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிஸ்கட் தொழிலில் இறங்கிய அம்பானி குழுமம்.. 9 புதிய ரக பிஸ்கட்டுகள் அறிமுகம்!

Mukesh Ambani's Reliance Enters Indian Biscuit Market | இந்திய பிஸ்கட் சந்தையில் ஏற்கனவே பல முன்னணி நிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில் தான், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் இந்த சந்தையில் இணைந்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிஸ்கட் தொழிலில் இறங்கிய அம்பானி குழுமம்.. 9 புதிய ரக பிஸ்கட்டுகள் அறிமுகம்!
இண்டிபெண்டன்ஸ் பிஸ்கட்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Nov 2026 15:12 PM IST

உலக பணக்காரர்களில் முக்கியமான ஒருவராகவும், இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராகவும் உள்ளவர் தான் முகேஷ் அம்பானி (Mukesh Ambani). இவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு சுமார் 88.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். முகேஷ் அம்பானியின் குடும்பம் ஏற்கனவே ரிலையன்ஸ் (Reliance) உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் பல்வேறு துறைகளில் தொழில் செய்து வரும் நிலையில், தற்போது புதிய துறை ஒன்றில் கால் பதித்துள்ளது. அதாவது அம்பானி குழுமம் தற்போது பிஸ்கட் (Biscuit) தொழிலில் கால் பதித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிஸ்கட் தொழிலில் இறங்கிய அம்பானி குழுமம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) நிறுவனம் சமீபத்தில் கேம்பா கோலா மூலம் குளிர்பான தயாரிப்பதில் கால் பதித்தது. அதனை தொடர்ந்து தற்போது பிஸ்கட் தயாரிப்பிலும் கால் பதிக்க உள்ளது. அதாவது, அம்பானி குழுமம் இண்டிபெண்டன்ஸ் (Independence) என்ற பிராண்டின் கீழ் 9 புதிய ரக பிஸ்கட்டுகளை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பிஸ்கட்டுகள் முதற்கட்டமாக தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதன் பிறகு இந்தியாவின் மற்ற சில மாநிலங்களிலும் இந்த பிஸ்கட் விற்பனைக்கு வர உள்ளது. இந்த பிஸ்கட்டுகள் 5, 10, 40 மற்றும் 125 என வெவ்வேறு விலைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பிரபலமான ஹேட்ச்பேக் காரின் விலையை உயர்த்திய ஹூண்டாய்.. விவரம் என்ன?

பல வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிஸ்கட்கள்

ரிலையன்ஸ் நிறுவனம் தங்களது புதிய பிஸ்கட்களை பல ரகங்களில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது பவர் அப், பட்டர் பிளிஸ், மில்கி பவர், மேரி பிரைம் போன்ற சாதாரண வகை பிஸ்கட்டுகளையும், கோகோ, வெண்ணிலா, சாக்லேட் க்ரீம் யம் ஆரஞ்சு, சாக்லேட் க்ரீம் யம் சாக்கோ போன்ற க்ரீம் மொத்தம் 9 வகை பிஸ்கட்டுகளையும் அறிமுகம் செய்துள்ளது.

இதையும் படிங்க : தங்கத்தை வாங்கி வைத்தால் தான் எதிர்காலத்தில் பிழைக்க முடியும்.. முக்கிய நிபுணர் அறிவுரை!

பிஸ்கட் சந்தை மதிப்பு ரூ.90,300 ஆக உயரும் என எதிர்பார்ப்பு

இந்தியாவில் ஏற்கனவே பிஸ்கட் சந்தையில் பல முன்னணி நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில், தற்போது ரிலையன்ஸ் குழுமமும் கால் பதித்துள்ளது. இதன் காரணமாக இந்திய பிஸ்கட் சந்தை மிகவும் போட்டிகரமானதாக மாறியுள்ளது. குறிப்பாக 2024 ஆம் நிதியாண்டில் ரூ.55,100 கோடியாக இருந்த பிஸ்கட் சந்தையின் மதிப்பு 2029 ஆம் ஆண்டு ரூ.90,300 கோடியாக உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பிஸ்கட் நுகர்வு இந்திய பொதுமக்கள் மத்தியில் அதிகமாக உள்ளதன் காரணமாக அடுத்தடுத்து நிறுவனங்கள் பிஸ்கட் தயாரிப்பில் இறங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us