AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கன்னியாகுமரியில் களமிறங்கிய அதிநவீன படகு.. ஒரே நேரத்தில் 150 பேர் பயணம்.. முழு விவரம் உள்ளே!

Kanyakumari New Ferry Service : கன்னியாகுமரி கடல் பகுதியில் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி பார்க்க சென்று வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அதிநவீன புதிய படகு சேவை விரைவில் அறிமுகமாக உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது .

கன்னியாகுமரியில் களமிறங்கிய அதிநவீன படகு.. ஒரே நேரத்தில் 150 பேர் பயணம்.. முழு விவரம் உள்ளே!
அதிநவீன புதிய படகு சேவை.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 12 Nov 2026 16:08 PM IST

தமிழகத்தில் சர்வதேச சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக கன்னியாகுமரி விளங்கி வருகிறது. இங்கு, தினந்தோறும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றுலாவுக்காக வந்து செல்கின்றனர். அத்துடன் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் இதைவிட அதிகமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிவது வழக்கமாகும். அவ்வாறு வருகை தரும் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் அவற்றை இணைக்கும் கண்ணாடி கூண்டு பாலம் உள்ளிட்டவற்றை சுற்றிப் பார்த்து வருகின்றனர். இவற்றை பார்ப்பதற்கு கரைப்பகுதியில் இருந்து படகு மூலம் சென்று வருவது வழக்கமாகும். இந்த நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு மேலும் வசதியாக 150 இருக்கைகள் உடைய புதிய படகு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் 150 இருக்கையுடன் அதிநவீன படகு

கடந்த திமுக ஆட்சியில் சுற்றுலா பயணிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், புதிய நவீன சுற்றுலா படகு வாங்குவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, கோவாவில் 150 இருக்கைகள் உடைய அதிநவீன வசதிகளுடன் படகு தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த பணிகள் முடிந்த நிலையில், அந்த அதிநவீன படகு கடல் வழியாக கன்னியாகுமரிக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படகானது கன்னியாகுமரி கடல் பகுதியில் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை வழித்தடத்தில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க: தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி… சேலத்தில் ரூ. 75 கோடி வங்கி கடன் மோசடி.. மாணவர்களை பலிகடாவாக்கிய கும்பல்!

சுற்றுலா பயணிகள் வசதிக்காக புதிய படகு சேவை

இந்த சோதனை ஓட்டம் இன்று வியாழக்கிழமை ( நவம்பர் 12- ஆம் தேதி) வெற்றிகரமாக நடத்தப்பட்டிருந்தது. இந்த படகு சேவையானது விரைவில் பொதுமக்கள் வர உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் சுமார் 150 சுற்றுலா பயணிகள் இந்த படகில் பயணம் மேற்கொண்டு விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்று வரமுடியும். அத்துடன், இந்த படகில் பல்வேறு நவீன வசதிகள் இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படகு மூலம் சுற்றுலா பயணிகள் காத்திருக்கும் நேரம் வெகுவாக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் காத்திருக்கும் நேரம் குறையும்

புதிதாக கொண்டுவரப்பட்ட இந்த அதிநவீன படகுக்கு பெருந்தலைவர் காமராஜர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்ப்பதற்காக ஏராளமானோர் வருகை தருகின்றனர். இதனால், போதிய படகு வசதி இல்லாத காரணத்தால் சுற்றுலா பயணிகள் அதிக நேரம் காத்திருக்கும் நிலை இருந்து வந்தது தற்போது தீர்க்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தனியார் பள்ளிகள் அங்கீகார மோசடி வழக்கு.. ஜாமின் மறுத்த சிறப்பு நீதிமன்றம்.. உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த அன்பில் மகேஷ்!!

Follow Us