AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நடந்தது என்ன..  முதல்வர் விஜய் என்ன பேசினார்.. முழு விவரம்!

TVK Mla Meeting : மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு எம்எல்ஏ களையும் தனியாக அழைத்து முதல்வர் விஜய் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியதாக வெளியாகி உள்ளன. இதுகுறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நடந்தது என்ன..  முதல்வர் விஜய் என்ன பேசினார்.. முழு விவரம்!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 11 Nov 2026 17:01 PM IST

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று புதன்கிழமை ( நவம்பர் 11- ஆம் தேதி) நடைபெற்றது. இதில், தவெகவை சேர்ந்த 108 எம்எல்ஏக்களும் பங்கேற்றிருந்தனர். கூட்டத்துக்கு தலைமை வகித்த  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய் ஒவ்வொரு எம்எல்ஏக்களையும் தனித்தனியாக அழைத்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலில் எந்த விதமான சர்ச்சை மற்றும் பிரச்னைகளில் சிக்காத எம்எல்ஏகளை தனித் தனியாக அழைத்து முதல்வர் விஜய் பேசியிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, தங்களது தொகுதிகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டதாக தெரிகிறது.

குதிரை பேர வலையில் சிக்கிவிடக்கூடாது

அத்துடன் தமிழக வெற்றிக் கழக அரசின் ஆட்சி 6 மாதங்களை நிறைவு செய்துள்ளது. எனவே, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இணைந்து மக்கள் பணியாற்ற வேண்டும். தங்கள் தொகுதிக்கு உட்பட்ட மக்கள் கோரிக்கைகளை கேட்டறிந்து நிறைவேற்ற வேண்டும். தேவையில்லாத சர்ச்சைகள் மற்றும் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளக்கூடாது. எதிர்க்கட்சிகள் விரிக்கும்  குதிரை பேர வலைகளில் சிக்கிக் கொள்ளக்கூடாது. குதிரை பேர விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏகளை எதிர்க்கட்சிகள் சிக்க வைக்க பார்க்கின்றனர். எனவே, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

மேலும் படிக்க: ரூ.400 கோடி லஞ்ச புகார்.. ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் சரணடைந்த முக்கிய நபர்.. வழக்கில் அடுத்த பரபரப்பு!

சர்ச்சைகளில் சிக்குவோர் மீது கடும் நடவடிக்கை

தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்கும் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக வெற்றிக் கழக அரசை முடக்கும் முயற்சியில் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தவறான வழியில் செல்லும்  எம்எல்ஏக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்வேறு எச்சரிக்கைகளை முதல்வர் விஜய் விடுத்துள்ளார். இந்த கூட்டம் சுமார் அரை மணி நேரம் நீடித்த நிலையில் பெண் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினர். அவர்களைத் தொடர்ந்து, ஆண் எம்எல்ஏக்களும் ஒவ்வொருவராக விடுதியில் இருந்து தங்களது கார்களில்  புறப்பட்டு சென்றனர்.

சர்ச்சைகளில் சிக்கி வரும் தவெக எம்எல்ஏக்கள்

அண்மையில் துறையூர் தொகுதி எம்எல்ஏவும், துணை சபாநாயகருமான ரவிசங்கர், மனு அளிக்க வந்த நபரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு வாட்ஸ் ஆப்பில் ஆபாச மெசெஜ் அனுப்பியதாக கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது குற்றசாட்டு எழுந்தது. ஒருபுறம் இருக்க தமிழகத்தில் அதிகரித்து வரும் கொலை உள்ளிட்ட குற்ற  சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீரழிவு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. இந்த நிலையில், தான் தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது.

மேலும் படிக்க: தவெக ஆட்சியில் மீண்டும் சிறுமி கடத்தல் முயற்சி.. காவல்துறைக்கு விடப்பட்ட சவால்.. நயினார் நாகேந்திரன்!

Follow Us