AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உள்ளத்தில் நம்பிக்கை விதைக்கும் வீரியமான படைப்பு… சீன் படத்தைப் பாராட்டிய இயக்குநர் சீனு ராமசாமி!

Director Seenu Ramasamy praised Scene movie | நடிகர் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் சீன். இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் சீனு ராமசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உள்ளத்தில் நம்பிக்கை விதைக்கும் வீரியமான படைப்பு… சீன் படத்தைப் பாராட்டிய இயக்குநர் சீனு ராமசாமி!
சீனு ராமசாமிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Nov 2026 16:58 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சீனு ராமசாமி (Seenu Ramasamy). இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் பிசியாக இயக்குநராக வலம் வரும் இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மக்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது. மேலும் இவரது இயக்கத்தில் உருவாகும் பெரும்பாலான படங்கள் கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் சினிமாவில் பல சிறந்த நடிகர்களை அறிமுகம் செய்து வைத்த பெருமையும் இவருக்கு உண்டு. அதிலும் குறிப்பாக நடிகர் விஜய் சேதுபதியை நாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்ததும் இயக்குநர் சீனு ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களை இயக்கி வரும் இயக்குநர் சீனு ராமசாமி தமிழ் மொழியில் மட்டும் இன்றி எந்த மொழியாக இருந்தாலும் அதில் வரும் சிறந்த படங்களை பாராட்ட தவறியதில்லை. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான சீன் படத்தை இயக்குநர் சீனு ராமசாமி வெகுவாகப் பாராட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சீன் படத்தைப் பாராட்டிய இயக்குநர் சீனு ராமசாமி:

அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, மர்மம் நிறைந்த விறுவிறுப்பான புத்திசாலித்தனமான ஒரு திரைக்கதையைத் திரு. சூர்யா அவர்களின் அர்ப்பணிப்பான துடிப்புமிக்க நடிப்பு பிரம்மாண்டமாக்குகிறது. கதையும் இயக்கமும் ஜித்து மாதவன் அந்த அற்புதத்தை நிகழ்த்துகின்றன. நஸ்ரியா ஃபகத் மற்றும் நஸ்லேன் நடிப்பில் இணையான பக்கபலம். சீன் வெற்றித் திரைப்படம், உள்ளத்தில் நம்பிக்கை விதைக்கும் வீரியமான படைப்பு. என் இதயபூர்வமான வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜின் கூட்டணி படத்தின் டைட்டில் இதுவா? – வைரலாகும் தகவல்!

இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… சாதிய மோதல் ஏற்பட வாய்ப்பு… கமல்ஹாசனின் சண்டியர் பட தலைப்புக்கு எதிராக காவல்துறையிடம் புகார்

Follow Us