விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் யாரும் தாக்க வேண்டாம் – இயக்குநர் சீனு ராமசாமி
Director Seenu Ramasamy X Post | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சீனு ராம சாமி. இவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். தொடர்ந்து சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தமிழ் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் 8-வது சீசனில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். முன்பு இரண்டு சீசன்களில் அவ்வபோது சின்ன சின்ன விசயங்களில் சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஜய் சேதுபதி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் முதல் வாரத்திலேயே லீடர் எப்படி இருக்க வேண்டும், அவரின் பண்பு எப்படி இருக்க வேண்டும் என்ன தகுதி இருக்கிறது லீடருக்கு என்று தலைமை குறித்து பேசியது தமிழ் நாட்டில் ஒரு சர்ச்சையை கிளப்பியது.
அதன்படி அவர் பேசியது மறைமுகமாக தமிழ் நாட்டின் முதலமைச்சர் விஜய் குறித்து என்றும் பெரும் சர்ச்சை கிளம்பியது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக பல கருத்துகள் பேசப்பட்டு வருகின்றது. மேலும் பலரும் தங்களது எதிர்ப்பு மற்றும் ஆதரவை தெரிவித்து வரும் நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி விஜய் சேதுபதிக்கு ஆதரவாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் யாரும் தாக்க வேண்டாம்:
அதன்படி இயக்குநர் சீனு ராமசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பேசியதாவது, விஜய் சேதுபதி யார் அவர் எப்படிப்பட்டவர் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஒரு நிகழ்ச்சியில் டிஆர்பிகாக அவரை தவறாக பயன்படுத்திக்கொண்டனர் என்றும் அவர் பலருக்கு பல உதவிகளை செய்துள்ளார் என்றும் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி குறித்து எதுவும் தெரியாமல் அவரை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… பவர் ஹவுஸ் படத்தில் ரியா ஷிபுவின் கதாப்பாத்திரம் என்ன தெரியுமா?
இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
அனைவருக்கும் அன்பான வணக்கம்.
விஜய் சேதுபதியை உள்ளும் புறமும் நன்கறிவேன். எதையும் நேர்பட கண்கள் பார்த்து சொல்லக் கூடிய மனிதன்; மறைந்திருந்து தாக்கும் குணம் கொண்ட மனிதன் அல்ல.
உண்மையில் தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை மக்கள் அதிகமாக பார்க்கிறார்கள். மற்ற ஓடிடி, சினிமா, இணையதள…
— Seenu Ramasamy (@seenuramasamy) September 16, 2026
Also Read… பிக்பாஸ் தமிழ் போட்டியாளர்களிடையே வலுக்கும் மோதல்… வைரலாகும் தகவல்!