AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஹாலிவுட்டில் ரீமேக்காகும் விஜய் சேதுபதியின் மகாராஜா படம்? வைரலாகும் தகவல்

Maharaja movie to be remade in Hollywood | நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் மகாராஜா. இந்தப் படம் தற்போது ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

ஹாலிவுட்டில் ரீமேக்காகும் விஜய் சேதுபதியின் மகாராஜா படம்? வைரலாகும் தகவல்
மகாராஜா படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Sep 2026 11:29 AM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் 50-வது படமாக தமிழ் சினிமாவில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றப் படம் மகாராஜா. அப்பா மகள் பாசத்தை மையாக வைத்து உருவாகி இருந்த இந்தப் படத்தை இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப்  படத்தில் நடிகர் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடிகர்கள் அனுராக் காஷ்யப், சச்சனா நமிதாஸ், குழந்தை ஷினிகா, மம்தா மோகன்தாஸ், நட்டி சுப்ரமணியம் மற்றும் அபிராமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் தமிழ் சினிமாவில் உருவாகி இருந்தாலும் உலக அளவில் பல நாடுகளில் ரசிகர்களிடையே வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல மொழிகளில் படத்தை ரீமேக் செய்ய பலரும் தொடர்ந்து திட்டமிட்டு வந்தனர். அதில் இந்தி சினிமாவில் நடிகர் அமீர்கான் இந்தப் படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஹாலிவுட்டில் ரீமேக்காகும் விஜய் சேதுபதியின் மகாராஜா படம்?

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான தகவலின்படி ஹாலிவுட் சினிமாவில் மகாராஜா படம் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் மேத்யூ மெக்கானஹி (Matthew McConaughey) நடிக்க வாய்ப்புள்ளது. இந்த ரீமேக் குறித்துப் பேசிய தயாரிப்பாளர் சுதன், நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நட்சத்திரங்களில் மெக்கானஹியும் ஒருவர்.

ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை அந்த ஏஜென்சி மட்டுமே உறுதிப்படுத்த முடியும். ரீமேக் உரிமைகளுக்காக ஒரு ஹாலிவுட் ஏஜென்சி எங்களை அணுகியது. தற்போது அவர்கள் ஒரு முன்னணி நட்சத்திரத்தைக் கொண்டு இத்திட்டத்தை முன்னெடுக்க முயற்சித்து வருகின்றனர். இப்படம் அடுத்த ஆண்டு படப்பிடிப்புக்குச் செல்லக்கூடும் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… இந்த சடங்கின் முழுமையான அர்த்தம் எனக்குத் தெரியாமல் இருக்கலாம்… தனது சீமந்தம் குறித்து பேசிய நடிகை சமந்தா – வைரலாகும் போஸ்ட்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… நண்பேண்டா மொமண்ட்… அஜித் உடன் ரேஸ் காரில் பயணித்த முதலமைச்சர் விஜய் – வைரலாகும் வீடியோ

Follow Us