தீபாவளி ரிலீஸை உறுதி செய்தது மூக்குத்தி அம்மன் 2 படக்குழு – வைரலாகும் டீசர்!
Rise of Mahasakthi Teaser Mookuthi Amman 2 | நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து தற்போது உருவாகி உள்ள படம் மூக்குத்தி அம்மன் 2. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசரைப் படக்குழு தற்போது வெளியிட்டு உள்ளது.
மலையாள சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கி தற்போது தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் அடுத்தடுத்து தென்னிந்திய மொழிகளில் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் நடிகை நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 4 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அந்த நான்கு படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்துப் படங்களும் திரையரங்குகளில் வெளியாக வரிசையாக காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகை நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மூக்குத்தி அம்மன் 2.
முன்னதாக மூக்குத்தி அம்மன் படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர் சி எழுதி இயக்கி உள்ளார். முதல் பாகத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி ரிலீஸை உறுதி செய்தது மூக்குத்தி அம்மன் 2 படக்குழு:
முதல் பாகத்தில் பெரிய அளவில் எந்தவிதமான ஃபேண்டசியும் இல்லாமல் இயல்பாக ஒரு சாமி படமாக அமைந்து இருந்தது. ஆனால் இந்த இரண்டாம் பாகம் மிகவும் வித்யாசமாக உருவாகி உள்ளது இந்த மூக்குத்தி அம்மன் 2 படத்தின் டீசரைப் பார்க்கும் போதே தெரிகின்றது. மேலும் இந்தப் படத்தில் நயன்தாரா உடன் இணைந்து நடிகர்கள் துனியா விஜய், ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, யோகி பாபு, மைனா நந்தினி, கருட ராம், அபிநயா, ஸ்ருதி.எஸ், சிங்கப்புலி அண்ணாவி, வி.ஆர்.சுவாமிநாதன், சிவகுமார் எஸ், சுனில் வர்மா இந்துகுரி, வர்ஷினி வெங்கட், பால கருப்பையா, ஆனந்த அதிஷ்ட சாகி லக்ஷ்மி, நிதின் சத்தியா லட்சுமி என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் வருகின்ற நவம்பர் மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… ஆல் டைம் அன்பா இருக்கும் என் தங்கமே…. யூடியூபில் 50 மில்லியன் பார்வைகளை கடந்தது
மூக்குத்தி அம்மன் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Presenting the #RiseOfMahasakthi (Teaser) in Tamil, Telugu, Hindi, Kannada & Malayalam ❤️
Releasing on Nov 6th, 2026
Tamil – https://t.co/j8SnKjKNcv
Telugu – https://t.co/sEsp2iWsZE
Hindi – https://t.co/LWf7rhKMHM
Kannada – https://t.co/rTEWkxIrVz
Malayalam -… pic.twitter.com/6tlVePLmq1— Vels Film International (@VelsFilmIntl) September 14, 2026
Also Read… தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் நடிகர் மிதுன் ஜெய் சங்கர்!



