ஆல் டைம் அன்பா இருக்கும் என் தங்கமே…. யூடியூபில் 50 மில்லியன் பார்வைகளை கடந்தது
Alaakaa Loova Tamil Lyrical Video | நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ஓம். இந்தப் படத்தில் இருந்து முன்னதாக வெளியான அலாகா லோவா என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ தற்போது யூடியூபில் 50 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் படம் ஓம். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து உருவாக உள்ள படங்கள் தொடர்பான அப்டேட்களும் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதே வேலையில் தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ஓம் படம் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். அதன்படி நடிகர்கள் மம்முட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தில் இருந்து சியா என்ற வீடியோ நடிகர் மம்முட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது.




அலாகா லோவா பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வைகளை கடந்தது:
இந்த நிலையில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து முன்னதாக அலாகா லோவா என்ற பாடல் வீடியோவைப் படக்குழு வெளியிட்டு இருந்தது. இந்தப் பாடல் தற்போது யூடியூபில் மட்டும் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்ததுள்ளது. இது குறித்து ஓம் படக்குழு தங்களது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
ஓம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
All- time anba irukum en Thangame♥️
Alaakaa Loova (Tamil) hits 50 MILLION on YouTube.
▶️ https://t.co/nLdXc1Q35l#OM on the big screens from October 16.
A @Rajkumar_KP Film.@dhanushkraja @mammukka @Sai_Pallavi92 @SaiAbhyankkar @wunderbarfilms @RTakeStudios #NaseeruddinShah… pic.twitter.com/gKvaYlPYe8
— Wunderbar Films (@wunderbarfilms) September 12, 2026
Also Read… டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் பாராட்டைப் பெற்ற டோரதி படம்