AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸ் வீட்டில் கேப்டன் போட்ட சட்டத்தால் சிறையில் அடைக்கப்பட்ட முனியம்மா – வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து போட்டியாளர் முனியம்மா மற்ற போட்டியாளர்களுடன் பிரச்சனையில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக கேப்டன் முடிவெடுத்து அவரை சிறையில் அடித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் வீட்டில் கேப்டன் போட்ட சட்டத்தால் சிறையில் அடைக்கப்பட்ட முனியம்மா – வைரலாகும் வீடியோ
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Sep 2026 13:56 PM IST

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய நிலையில் தொடர்ந்து இதுவரை 09 சீசன்கள் முடிவடைந்துள்ளது. மேலும் இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் தற்போது தொடங்கி உள்ளது. கடந்த 06-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு தொடங்கிய இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் மொத்தம் 19 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தனர். அதில் மூன்று போட்டியாளர்கள் காமென் மேன் நிகழ்ச்சியில் இருந்து அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி முதல் வாரம் முடிவடைவதற்கு முன்பே ப்ளாக் பாண்டி உடல் நலக் குறைவு காரணமாக வெளியேற்றப்பட்டார். இதனால் தற்போது 18 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் உள்ளனர்.

இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து மற்ற போட்டியாளர்கள் மற்றும் பார்க்கும் பார்வையாளர்கள் இடையே பெரும் எரிச்சல் மூட்டும் விதமாக நடந்துகொள்கிறார். இது குறித்து பார்வையாளர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் வீட்டில் சிறையில் அடைக்கப்பட்ட முனியம்மா:

அதன்படி பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கேப்டனாக உள்ள சாதிகா சட்டம் ஒன்றை கொண்டு வந்து முனியம்மாவை சிறையில் அடைக்க முடிவு செய்கிறார். அதனை பிக்பாஸ் ஏற்றுக்கொண்டு தற்போது முனியம்மாவை சிறையில் அடைத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சர்தார் 2 முதல் மண்டாட்டி வரை… தென்னிந்திய மொழிகளில் இந்த வாரம் வெளியாகும் முக்கிய நடிகர்களின் படங்கள் லிஸ்ட் இதோ!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சிக் குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தீபாவளிக்கு சீன்னா வரோம்… வெளியானது சூர்யாவின் சீன் படத்தின் டைட்டில் டீசர்

Follow Us