தீபாவளிக்கு சீன்னா வரோம்… வெளியானது சூர்யாவின் சீன் படத்தின் டைட்டில் டீசர்
SCENE Title Teaser | நடிகர் சூர்யாவின் நடிப்பில் 47-வது படமாக உருவாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்து இருந்த படத்திற்கு தற்போது படக்குழு சீன் என்று பெயர் வைத்துள்ளது. இந்த படத்தின் டைட்டில் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இதுவரை இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அதில் ஒன்று இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான கருப்பு மற்றொன்று இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் சூரியாவின் இந்த 2026-ம் ஆண்டு சினிமா பயணத்தில் மிக முக்கிய ஆண்டாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யாவின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் அடுத்து மூன்றாவதாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சீன். நடிகர் சூர்யாவின் 47-வது படமாக உருவான இந்தப் படத்தை மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் ஜித்து மாதவன் எழுதி இயக்கி உள்ளார். இவர் முன்னதாக மலையாள சினிமாவில் ஆவேஷம் என்ற படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




வெளியானது சூர்யாவின் சீன் படத்தின் டைட்டில் டீசர்:
இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் நஸ்ரியா நாஜிம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உட்பட நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தின் டைட்டில் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டதுடன் படத்தின் வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி சூர்யாவின் 47-வது படத்திற்கு சீன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 6-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்லனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… ஜெயிலர் 2 Vs ஓம்.. ஜெயிலர் 2 படத்துடனான மோதலை தனுஷ் தவிர்க்காததற்கு காரணம் இதுவா?
சீன் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Diwali-ku🧨 #SCENE -ah Varom! 🔥https://t.co/PST5H5g5JS
In cinemas from 6th Nov 2026! @Suriya_offl @jithumadavan #Jyotika #NazriyaFahadh #Naslen @sushintdt @Ashwini90372999 @masharhamsa_ @_VishnuGovind @ChethanDsouza @Dravid_Selvam @rajpriyan007 @SureshMathiyal2… pic.twitter.com/hCbztCPIIv
— Zhagaram Studios (@ZhagaramOffl) September 9, 2026