AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கனமழை எச்சரிக்கை எதிரொலி: திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..

School Leave Due To Heavy Rain: திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நாளை (அக்டோபர் 26) மாவட்டத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி அறிவித்துள்ளார்.

கனமழை எச்சரிக்கை எதிரொலி: திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Oct 2026 20:49 PM IST

அக்டோபர் 25, 2026: தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (அக்டோபர் 26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி பிறப்பித்துள்ளார். புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடரும் கனமழை!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாகத் தென் மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான நீலகிரி மற்றும் கோவையிலும் கனமழை பதிவாகி வருகிறது. இதனால் கொடைக்கானல், நீலகிரி, ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 5 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை எச்சரிக்கை..

அக்டோபர் 26-ம் தேதி எந்தெந்த மாவட்டங்களில் மழை?

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்குத் தொடர்ந்து மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: “த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu! விஜய் அரசை கடுமையாக விமர்சித்த மு.க ஸ்டாலின்..

அக்டோபர் 26-ம் தேதி புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை:

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நாளை (அக்டோபர் 26) மாவட்டத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி அறிவித்துள்ளார். இதேபோல், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us