AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu! விஜய் அரசை கடுமையாக விமர்சித்த மு.க ஸ்டாலின்..

MK Stalin On CM Vijay: முதலமைச்சர் விஜய் கோட் சூட், பட்டுவேட்டி சட்டை அணிவது, கான்வாயில் வந்து செல்வது ஆகியவற்றை மட்டுமே தனது பணியாகக் கருதுகிறாரா என்றும், முதலமைச்சருக்கான அலுவலகம் மற்றும் இல்லத்தைத் தயார் செய்வது தொடர்பான பணிகளைத் தவிர, ஆறு மாத த.வெ.க. ஆட்சியில் குறிப்பிடத்தக்க வகையில் வேறு எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

“த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu! விஜய் அரசை கடுமையாக விமர்சித்த மு.க ஸ்டாலின்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Oct 2026 19:21 PM IST

அக்டோபர் 25, 2026: தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாகக் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையிலான அரசை மு.க ஸ்டாலின்  கடுமயாக விமர்சித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளதாகவும், குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 “துப்பாக்கி ஹீரோவாகத் திரையில் பார்த்து வாக்களித்த மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்!”


இதுகுறித்து வெளியிடப்பட்ட பதிவில், “த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், மாநிலத்தில் நடைபெற்று வரும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்பு விஜய், “இது என்ன நாடா, இல்லை காடா?” எனக் கேள்வி எழுப்பியதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போது அவரே ஆட்சியில் இருக்கும் நிலையில், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் அரசு எவ்வாறு செயல்படுகிறது எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “துப்பாக்கி ஹீரோ” எனத் திரையில் பார்த்து நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் திறனற்றவராக விஜய்யைப் பேசத் தொடங்கிவிட்டதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க: சென்னையில் நடந்த நடிகர் தனுஷ் நற்பணி இயக்க கூட்டம்.. மகளிருக்கு வெள்ளி விளக்கு பரிசு.. பேசியது என்ன?

“கான்வாயில் செல்வது மட்டும்தான் முதலமைச்சரின் பணியா?”

முதலமைச்சர் விஜய் கோட் சூட், பட்டுவேட்டி சட்டை அணிவது, கான்வாயில் வந்து செல்வது ஆகியவற்றை மட்டுமே தனது பணியாகக் கருதுகிறாரா என்றும், முதலமைச்சருக்கான அலுவலகம் மற்றும் இல்லத்தைத் தயார் செய்வது தொடர்பான பணிகளைத் தவிர, ஆறு மாத த.வெ.க. ஆட்சியில் குறிப்பிடத்தக்க வகையில் வேறு எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: செஞ்சி 7 வயது சிறுமி மாயமான வழக்கு: 2-வது நாளாக பெற்றோரிடம் சிபிசிஐடி விசாரணை! 6 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தநாள் கொண்டாடியது ஏன்?

“மக்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்!”

தனது சொகுசு வாழ்க்கை குறித்து காட்டும் அக்கறையில் சிறிதளவாவது பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிலும் முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு கொலைக்களமாகவும், குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் மாறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us