வாக்களிக்காதவர்கள் இல்லை வாக்களித்தவர்கள் கூட புலம்பும் நிலையில் தான் இன்றைய ஆட்சி இருக்கிறது – மு.க ஸ்டாலின் தாக்கு..
MK Stalin Speech: வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல; வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அதுதான் உண்மை. இதைப் புரிந்துகொள்ள வேண்டும். ரீல்ஸ் ஆட்சி என்பது, வாக்களிக்காத மக்கள் மட்டுமல்ல; வாக்களித்த மக்களும் புலம்பிக் கொண்டிருக்கும் சூழலாக இருக்கிறது” என்று மு.க ஸ்டாலின் விமர்சித்தார்.
அக்டோபர் 25, 2026: வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல; வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ரீல்ஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விஜய் தலைமையிலான தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் இன்று (அக். 25) நடைபெற்ற முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று, மணமக்களை வாழ்த்திப் பேசிய அவர், தமிழகத்தில் நிலவும் விலைவாசி உயர்வு, நிர்வாகச் சீர்கேடு, மின்தடை, பாலியல் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளிட்ட விவகாரங்களைச் சுட்டிக்காட்டி அரசை விமர்சித்தார்.
“வாக்களித்தவர்களே வருத்தப்படும் நிலை”
தான் முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு அளித்த முதல் பேட்டியில், தங்களுக்கு வாக்களிக்காதவர்கள்கூட வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று வருத்தப்படும் அளவுக்கு ஆட்சி நடத்துவேன் எனக் கூறியதை ஸ்டாலின் நினைவுகூர்ந்தார்.
ஆனால், தற்போதைய நிலை அதற்கு நேர்மாறாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், “வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல; வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அதுதான் உண்மை. இதைப் புரிந்துகொள்ள வேண்டும். ரீல்ஸ் ஆட்சி என்பது, வாக்களிக்காத மக்கள் மட்டுமல்ல; வாக்களித்த மக்களும் புலம்பிக் கொண்டிருக்கும் சூழலாக இருக்கிறது” என்று விமர்சித்தார்.
விலைவாசி உயர்வு முதல் பாலியல் குற்றங்கள் வரை..
தமிழகத்தில் விலைவாசி உயர்ந்து கொண்டிருப்பதாகவும், நிர்வாகம் சீர்குலைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டிய ஸ்டாலின், கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருவதாகக் கூறினார்.
மேலும் படிக்க: ‘சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்’ – செஃப் தாமுவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்
மேலும், குழந்தைகள் கடத்தல் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளிவருவதாகவும், மின்தடை பிரச்சினை ஒருபுறம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் ‘சிங்கப்பெண்’ படையைக் காப்பாற்றுவதற்கு மற்றொரு படையை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
“பாலியல் வன்கொடுமைக்கும் போதைப்பொருள் நடமாட்டத்துக்கு இடையே போட்டி”
முதலமைச்சர் விஜய், இரண்டு கட்சிகளுக்கு இடையேதான் போட்டி என்று கூறியதாகக் குறிப்பிட்ட ஸ்டாலின், அதற்குப் பதிலளிக்கும் வகையில், “இல்லை, இல்லை; மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டி” என்று முன்பு கூறியதாகத் தெரிவித்தார்.
தற்போது அந்த நிலை மாறி, பாலியல் வன்கொடுமைக்கும் போதைப்பொருள் நடமாட்டத்துக்கும் இடையேதான் போட்டி நிலவுவதாகக் கூறி, தமிழக அரசின் சட்டம்-ஒழுங்கு நிலைமையை அவர் விமர்சித்தார். மேலும், மேடைகளில் விஜய் தொடர்ந்து ‘தீய சக்தி’ என்று விமர்சித்துப் பேசுவதாகக் குறிப்பிட்ட ஸ்டாலின், அந்தத் தீய சக்தி யார் என்பது மக்களுக்கு நன்றாகப் புரிந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க: பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களைப் பகிர்ந்ததாகக் குற்றச்சாட்டு: ஆரணி அருகே ஓய்வுபெற்ற ராணுவ கேப்டன் கைது
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்குப் பாராட்டு
முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவைகளிலும், தனது தலைமையிலான திமுக ஆட்சியிலும் அவர் அமைச்சராகப் பணியாற்றியதை நினைவுகூர்ந்தார். குறிப்பாக, வருவாய்த் துறை அமைச்சராக இருந்தபோது பட்டா வழங்குவதில் இருந்த சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார்.
திமுக ஆட்சியின் ஐந்தாண்டு காலத்தில் 23 லட்சத்து 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குப் பட்டா வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்ட ஸ்டாலின், அதற்குக் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் பங்களிப்பு முக்கியக் காரணம் என்றும் தெரிவித்தார்.