கப்பு முக்கியம் பிகிலு… 7 ஆண்டுகளைக் கடந்தது பிகில் படம் – படக்குழு வெளியிட்ட வீடியோ பதிவு!
7 Years Of Bigil Movie | நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் பிகில். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதுகுறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திர சேகரின் மகனாக சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகர் விஜய் (Actor Vijay). இவர் சினிமாவில் நாயகான அறிமுகம் ஆனது என்னவோ வாரிசு நடிகராக சினிமாவில் வருகை தந்து இருந்தாலும் இவரது கடின உழைப்பே உலக அளவில் இவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களைக் கொடுத்து தற்போது சினிமாவைவிட்டுவிட்டு அரசியலில் களமிறங்கி முதலமைச்சராக தற்போது பதவி ஏற்றுள்ளார். தொடர்ந்து முதலமைச்சராக ஆவதற்கு முன்பே இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும் தீவிர அரசியலில் களமிறங்குவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து இவர் தற்போது தனது அரசியல் வாழ்க்கையில் பிசியாக இருக்கும் தளபதி விஜய் நடிப்பில் இனி படங்கள் வெளியாகாது என்பது அவரது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அவரது முந்தைய படங்களை அவர்கள் கொண்டாடவும் தவறுவது இல்லை என்பதே குறிப்பிடத்தக்கது.




7 ஆண்டுகளைக் கடந்தது பிகில் படம்:
அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பிகில். இயக்குநர் அட்லி இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்த நிலையில் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் விஜய் அப்பா மகன் என இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். மேலும் நடிகை நயன்தாரா நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படக்குழுவினர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளனர். அது தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
Also Read… Samantha: மூணு சூப்பர் ஹிட்.. அவர்தான் என்னோட Lucky Charm – சமந்தா சொன்ன பிரபலம்!
பிகில் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
7 years of “Cup-u Mukkiyam Bigil-u” 🏆
The whistles, the celebrations and the theatrical verithanam remain a phenomenon! ❤️🔥
#7YearsOfBigil
The Hon’ble Chief Minister @actorvijay Sir
A @Atlee_dir film
A @arrahman musical#Bigil https://t.co/avFctYUavR
— AGS Entertainment (@Ags_production) October 25, 2026
Also Read… நான் பிக்பாஸிற்கு கிடைத்த வரம்… வைரலாகும் டிடிஎஃப் வாசனின் பேச்சு!