AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Prabhas: பைரவா இஸ் பேக்.. பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு கல்கி 2 பட BTS-ஐ வெளியிட்ட படக்குழு!

Prabhas Birthday: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் ஸ்பிரிட் மற்றும் அடுத்தடுத்த படங்கள் உருவாக்கப்பட்டுவருகிறது. அந்த அந்த விதத்தில் கல்கி 2 படத்தின் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு கல்கி 2 படத்திலிருந்து BTS காட்சியை படக்குழு பகிர்ந்துள்ளது.

Prabhas: பைரவா இஸ் பேக்.. பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு கல்கி 2 பட BTS-ஐ வெளியிட்ட படக்குழு!
பிரபாஸ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 23 Oct 2026 11:37 AM IST

தெலுங்கு சினிமாவில் மக்களால் கொண்டாடப்படும் அதிரடி நாயகனாக இருந்துவருபவர் ரிபெல் ஸ்டார் பிரபாஸ் (Rebel Star Prabhas). இவரின் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகி பான் இந்திய அளவுக்கு வெற்றியை பெற்றிருக்கிறது. இவரின் நடிப்பில் இறுதியாக சினிமாவில் வெளியாகியிருந்த திரைப்படம் தி ராஜா சாப் (The Raja Saab). ஆக்ஷன் மற்றும் காமெடி திரில்லர் பாணியில் இந்த திரைப்படமானது வெளியாகியிருந்த நிலையில், இப்படத்திற்கு ஓரளவு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. அந்த படத்தை முடித்த கையேடு சீதா ராமம் பட இயக்குநருடன் ஃபௌசி (Fauzi), சந்திப்பு ரெட்டி வாங்காவின் இயக்கத்தில் ஸ்பிரிட் (Sprit) மற்றும் இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் கல்கி 2 (Kalki 2) என பேக் டு பேக் திரைப்படத்தில் இணைந்திருந்தார்.

அந்த விதத்தில் கல்கி 2 படத்தின் ஷூட்டிங்கில் தற்போது பிரபாஸ் தீவிரமாக இருந்துவருவதாக கூறப்படுகிறது. இன்று (23/10/2026) தனது 47வது பிறந்தநாளை பிரபாஸ் கொண்டாடிவருகிறார். அதை முன்னிட்டு கல்கி 2 படத்தின் BTS காட்சி வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: டெக்ஸ்லா படத்தில் பிரபல பாலிவுட் நடிகரை நடிக்க வைக்க நினைக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – வைரலாகும் தகவல்

பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு கல்கி2898ஏடி 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

கல்கி பார்ட் 2 படத்தின் நிலை என்ன:

நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டில் பான் இந்திய மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்த திரைப்படம்தான் கல்கி2898ஏடி. இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படமானது எதிர்காலத்தில் கடவுள் கல்கி அவதாரம் எவ்வாறு இருக்கும் என்ற பேண்டஸி கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: சீன் படத்திலிருந்து வெளியானது நஸ்லேனின் கதாப்பாத்திர அறிமுக வீடியோ

இந்த படமானது வெளியாகி சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது பார்ட் 2 படமானது தீவிரமாக உருவாக்கப்பட்டுவருகிறது. இப்படத்தில் சுமதி வேடத்திலிருந்து தீபிகா படுகோன் விலகிய நிலையில், தற்போது நடிகை சாய் பல்லவி அந்த வேடத்தில் நடிப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us