Prabhas: அதனால்தான் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை- பிரபாஸின் அதிர்ச்சியூட்டும் பதில்!
Prabhas About Marriage: தெலுங்கு சினிமாவில் உச்சமாக இருந்தவருபவர் பிரபாஸ். இவரின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வெளியீட்டிற்கு காத்திருக்கும் திரைப்படம்தான் தி ராஜா சாப். இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபாஸ், தான் எதற்கு இன்னும் திருமணம் செய்யவில்லை என்பது குறித்து கலகலப்பான பதிலை கொடுத்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
நடிகர் பிரபாஸின் (Prabhas) நடிப்பில் பான் இந்திய மொழிகளில் படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் (Telugu Cinema) உச்ச நடிகராக இருந்துவரும் இவர், தென்னிந்திய வசூல் நாயகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் சுமார் ரூ 1800 கோடிகளுக்கு மேல் வசூலித்து சூப்பர் ஹிட்டடித்துள்ளது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம்தான் கல்கி 2898ஏடி (Kalki2898AD). கடந்த 2024ம் ஆண்டில் வெளியான இப்படத்தை இயக்குநர் நாக் அஸ்வின் (Nag Ashwin)இயக்கியிருந்தார். பான் இந்திய மொழிகளில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டடித்திருந்தது. இந்த படத்தை அடுத்ததாக சில படங்களில் கேமியோ வேடத்திலும் இவர் நடித்திருந்தார். மேலும் இவரின் நடிப்பில் கலக்கல் காமெடி மற்றும் ஹாரர் கலந்த கலவையாக உருவாகியுள்ள படம்தான் தி ராஜா சாப் (The Raja Saab).
இந்த படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றிருந்தது. பின் இப்படத்தின் 2வது ட்ரெய்லர் இன்று 2025 டிசம்பர் 29ம் தேதியில் வெளியிடப்பட்டிருந்தது. இது தற்போது இணையத்தை வைரலாக பரவிவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபாஸ், தான் எதற்கு இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறித்து நகைச்சுவையான பதில் ஒன்றை கூறியுள்ளார்.




இதையும் படிங்க: திரையரங்குகளில் முதல் இடம்.. குட் பேட் அக்லி – பதிவை வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ்!
திருமணம் செய்யாததது குறித்து பிரபாஸ் சொன்ன பதில் :
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளர் பிரபாஸிடம், “பிரபாஸை திருமணம் செய்யவிரும்பினால் எப்படி இருக்கவேண்டும்” என்று எழுதப்பட்ட பலகை ஒன்றை காண்பித்தார். அவர் நடிகர் பிரபாஸிடமும் கேட்டிருந்தார். அதற்க்கு ரசிகர்களை அதிரவைக்கும் பதிலை பிரபாஸ் அளித்திருந்தார். அதில் நடிகர் பிரபாஸ், “அந்த உண்மையே எனக்கும் இன்னும் தெரியாமல்தான் நான் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை” என கலகலப்பாக தெரிவித்திருந்தார். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
தி ராஜா சாப் படக்குழு வெளியிட்ட 2வது ட்ரெய்லர் குறித்த எக்ஸ் பதிவு :
#TheRajaSaabTrailer 2.0….
It’s more than what you expect…..the performances, the visuals and the music all come together for a spectacular experience this Sankranthi, January 9th, 2026 ❤️❤️❤️https://t.co/54dIYHJ5qO#Prabhas #TheRajaSaab pic.twitter.com/re429heeGP
— The RajaSaab (@rajasaabmovie) December 29, 2025
இந்த் தி ராஜா சாப் படத்தை இயக்குநர் மாருதி இயக்க, பிரபாஸ், சஞ்சய் தத், மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது காமெடி கலந்த ஹாரர் மற்றும் ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகியுள்ளது.
இதையும் படிங்க: பேசில் ஜோசஃப் நடிக்கும் அதிரடி படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
இந்த படம் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் வெளியாகிறது. தமிழில் மட்டும் ஜனவரி 10ம் தேதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.