Pocket Novel Movie: விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்.. தொடங்கியது பாக்கெட் நாவல் பட ஷூட்டிங்!
Pocket Novel Movie Shooting: தென்னிந்திய சினிமாவில் நாயகனாக கலக்கிவருபவர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் தயாராகிவரும் நிலையில், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கூட்டணியில் பாக்கெட் நாவல் என்ற படத்தில் இணைந்துள்ளார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியதாக புகைப்படங்ககள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் காந்தி டால்க்ஸ் (Gandhi Talks). இந்த படத்தை மராத்தி இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியிருந்தார். மௌன திரைப்படமாக இப்படம் வெளியாகியிருந்த நிலையில், இதில் விஜய் சேதுபதியுடன் நடிகர்கள் அரவிந்த் சுவாமி மற்றும் அதிதி ரவா இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டிலே தயாராகியிருந்த நிலையில், கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பின் கடந்த 2025 ஜனவரி 30ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இப்படமானது மௌன திரைப்படம் என்ற நிலையில், மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக விஜய் சேதுபதி, வெற்றிமாறன் (Vetrimaran) இயக்கத்தில் அரசுன் (Arasan) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். இதையடுத்து தற்போது சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கிய, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா (Thiagarajan Kumararaja) இயக்கத்தில் புது படத்தில் இணைந்துள்ளார். இப்படமானது “பாக்கெட் நாவல்” (Pocket novel) என டைட்டிலிடப்பட்ட நிலையில், கடந்த 2026 பிப்ரவரி 16ம் தேதியில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இன்று 2026 பிப்ரவரி 17ம் தேதியில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் (Malavika Mohanan) நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: ‘அதைக் கேட்பதில் தனக்கு ஒருபோதும் வெட்கம் இருந்ததில்லை’ – மிருணாள் தாக்கூர் பேச்சு!
பாக்கெட் நாவல் திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக பகிரப்பட்ட பதிவு:
#VijaySethupathi & #MalavikaMohanan from the sets of #PocketNovel, directed by ThiyagarajanKumararaja 📸❤️
Shooting in Progress !🎬 pic.twitter.com/51o2cMNNTg
— Aneesh (@Aneesh_98) February 17, 2026
விஜய் சேதுபதி, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ஏற்கனவே, சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து மீண்டும் இணைந்துள்ள நிலையில், இந்த படமானது பணம் சார்ந்த கதைக்களத்தில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கும் நிலையில், இவர்களுடன் நடிகர்கள் ராஜ் பி ஷெட்டி மற்றும் கிஷோர் போன்ற பிரபலங்களும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர்.
இதையும் படிங்க: சூர்யா 46 படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்… நெகிழ்ந்து பேசிய மமிதா பைஜூ
இந்த படமானது வித்தியாசமான கதையில் உருவாகும் நிலையில், இதற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளாராம். மேலும் இதை டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்கப்பட்டு நிலையில், இன்று 2026 பிப்ரவரி 17ம் தேதியோடு இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாம். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகிவருகிறது.