AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

WIth Love: வித் லவ் பட தயாரிப்பாளர்களை நேரில் அழைத்து வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

CM Stalin Congratulated With Love Movie: ரஜினிகாந்தின் மகளும், தயாரிப்பாளராகவும் இருந்துவருபவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவரின் தயாரிப்பில் சமீபத்தில் வித் லவ் திரைப்படம். இந்நிலையில் இதை பாராட்டும் விதத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வித் லவ் பட தயாரிப்பாளர்களை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

WIth Love: வித் லவ் பட தயாரிப்பாளர்களை நேரில் அழைத்து வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மகேஷ் ராஜ், சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 17 Feb 2026 16:43 PM IST

டூரிஸ்ட் பேமிலி (Tourist Family) திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக நுழைந்து, “வித் லவ்” (With Love) திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த் (Abhishan Jeevinth). இவரின் நடிப்பில் இப்படமானது கடந்த 2026 பிப்ரவரி 6ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் (Madhan) இயக்க, சௌந்தர்யா ரஜினிகாந்த் (Soundarya Rajinikanth) தயாரித்திருந்தார். இந்த வித் லவ் திரைப்படமானது பள்ளிப்பருவ காதலை மையமாக கொண்டு வெளியாகியுள்ளது. இதில் அபிஷன் ஜீவிந்திற்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் (Anaswara Rajinikanth) நடித்திருந்தார். இவர்கள் இருவரின் ஜோடி, இப்படத்திலே முதல் முறையாக இணைந்திருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்நிலையில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் (Chief Minister M.K. Stalin), வித் லவ் திரைப்படத்தை பாராட்டும் விதத்தில் தயாரிப்பாளர்களை நேரில் அழைத்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் இருவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றுள்ளனர். இது தொடர்பான நெகிழ்ச்சி பதிவை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: 3 ஆண்டுகளை நிறைவு செய்தது தனுஷ் – வெங்கி அட்லூரி கூட்டணியில் ஹிட் அடித்த வாத்தி படம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தது குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த பதிவில் சௌந்தர்யா ரஜினிகாந்த், “மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியும், மிகுந்த பெருமையும் அடைகிறேன். மேலும் திரையரங்குகளில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வரும் எங்கள் வித் லவ் படத்திற்காக நானும் மகேஷ் தம்பியும் அவரது ஆசிகளைப் பெற்றோம்” என அந்த பதிவில் அவர் பகிர்ந்துள்ளார்.

வித் லவ் திரைப்படத்தின் வசூல் விவரம் :

இந்த வித் லவ் திரைப்படமானது காதல், எமோஷனல் மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் அமைந்திருந்த நிலையில், கடந்த 2026ம் ஆண்டு முதல் திரையரங்குகளில் வெளியாகிவருகிறது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் சேயோன் ரிலீஸ் தேதி எப்போது இருக்கும்? பொங்கலில் விட்டதை இப்படத்தின் மூலம் பிடிப்பாரா?

இப்படமானது வெளியாகி கிட்டத்தட்ட 11 நாட்களை கடந்துள்ள நிலையில், 10வது நாள் முடிவில் ரூ 25 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது. மேலும் தற்போது கிட்டத்தட்ட 26.5 கோடியை நெருங்கியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மேலும் இந்த வர இறுதிக்குள் ரூ 30 கோடியை நெருங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்டுவருகிறது.