AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

3 ஆண்டுகளை நிறைவு செய்தது தனுஷ் – வெங்கி அட்லூரி கூட்டணியில் ஹிட் அடித்த வாத்தி படம்!

3 Years Of Vaathi Movie: தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் வாத்தி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

3 ஆண்டுகளை நிறைவு செய்தது தனுஷ் – வெங்கி அட்லூரி கூட்டணியில் ஹிட் அடித்த வாத்தி படம்!
வாத்திImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Feb 2026 15:48 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாகி வரும் படங்களில் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் முன்னதாக வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் வாத்தி. இந்தப் படம் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நடிகர் தனுஷ் நாயகனாக நடித்த இந்தப் படத்தினை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் மூலமாக இயக்குநர் வெங்கி அட்லூரி தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பாக தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து இருந்தார். மேலும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

3 ஆண்டுகளை நிறைவு செய்தது தனுஷின் ஹிட் படமான வாத்தி:

பீரியட் ஆக்‌ஷன் ட்ராமாவாக உருவாகி இருந்த இந்த வாத்தி படத்தில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்துமுடித்துவிட்டு ஒரு ஊரிற்கு ஆசிரியராக செல்கிறார் தனுஷ். படத்தின் தொடக்கத்தில் மிகவும் ஜாலியாக இருக்கும் தனுஷ் அந்த ஊரில் உள்ள சாதிய பாகுபாட்டை பார்த்து மன வேதனை அடைகிறார். அதனைத் தொடர்ந்து அந்த பாகுபாட்டை எப்படி மாற்ற முயற்சிக்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைப் படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

Also Read… விமலின் வடம் படத்திலிருந்து வெளியானது பாண்டிமுனி பாடலின் லிரிக்கள் வீடியோ

வாத்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் 41வது பர்த்டே ஸ்பெஷல்! காமெடியன் டூ கலக்கல் ஹீரோ – சினிமா பயணம்!