Vijay Antony: ஒரு நல்ல படத்தை மிஸ் பண்ணிட்டோமேன்னு ஃபீல் பண்ணாதீங்க – விஜய் ஆண்டனி!
Vijay Antony Urges To Fans: தமிழில் பிரபல இசையமைப்பாளராக நுழைந்து , தற்போது நடிகராக படங்களில் நடித்துவருபவர் விஜய் ஆண்டனி. இவர் தயாரிப்பாளாராகவும் படங்களை தயாரித்துவரும் நிலையில், சமீபத்தில் பூக்கி என்ற திரைப்படத்தையும் தயாரித்திருந்தார். இந்நிலையில் இப்படம் குறித்து பதிவு ஒன்றை இவர் வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனி (Vijay Antony) நடிப்பில் ஆண்டிற்கு ஒன்று முதல் இரண்டு படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் கடந்த 2025ம் ஆண்டில் இவரின் நடிப்பில் மார்கன் (Maargan) மற்றும் சக்தித் திருமகன் (Shakthi Thirumagan) என இரு படங்கள் வெளியாகியிருந்தது. அதில் மார்கன் படமானது கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், இதையடுத்து வெளியான சக்தித் திருமகன் படமானது திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் தற்போது இவர் லாயர் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இப்படமானது அரசியல் மற்றும் நீதி குறித்த கதையில் தயாராகிவருகிறதாம். இதையடுத்து விஜய் ஆண்டனி தயாரிப்பாளராக தயாரித்துள்ள படம்தான் பூக்கி (Pookie). இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக மார்கன் படத்தில் நடித்த அஜய் திஷன் (Ajay Dhishan) நடிக்க, அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை தனுஷா (Dhanusha) நடித்துள்ளார்.
இந்த படமானது கடந்த 2026 பிப்ரவரி 13ம் தேதியில் காதலர் தினத்தை முன்னிட்டு உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிவரும் நிலையில், இப்படம் குறித்த பதிவு ஒன்றை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: அஜித் குமாருடன் அடுத்த படமா? – ரகசியத்தை உடைத்த சிறுத்தை சிவா!
பூக்கி திரைப்படம் குறித்து விஜய் ஆண்டனி கூறிய விஷயம் :
அந்த பதிவில் நடிகர் விஜய் ஆண்டனி, “நல்ல சினிமா விரும்பிகளே மற்றும் காதலன் காதலிகளே. நான் பூக்கி என்ற ஒற்று நல்ல படத்தை, புது திறமையானவர்களை கொண்டு தயாரித்துள்ளேன். இது 2 நாட்களுக்கு முன் வெளியாகியிருந்தது. இந்த பூக்கி திரைப்படம் ஒரு சூப்பர் படம். படம் பார்த்தவர்களிடம் கேளுங்க மிஸ் பண்ணாமல் பாருங்க. அப்புறம் ஒரு நல்ல திரைப்படத்தை தியேட்டரில் பார்க்க மிஸ் பண்ணிட்டானு பீல் பண்ணாதீங்க” என அந்த பதிவில் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
பூக்கி திரைப்படம் குறித்து விஜய் ஆண்டனி வெளியிட்ட பதிவு :
— vijayantony (@vijayantony) February 15, 2026
இந்த பூக்கி திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா என்பவர் இயக்கியுள்ள நிலையில், விஜய் ஆண்டனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு அவரே இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விமானநிலையத்தில் ரசிகர்கள் செய்த செயல்.. உறைந்து நின்ற ரஜினிகாந்த் – வீடியோ இதோ!
இப்படமானது யூத் ஜெனரேஷன் காதல் கதையில் தயாராகியுள்ளது. ஒரு பிரேக்கப் செய்வதற்கு ஒரு ஜோடி படும் கஷ்டம், பின் அவர்கள் பிரிந்தார்களா? இல்லை சேர்ந்தார்களா? என்பதுதான் கதை. இப்படமானது தற்போதுவரை திரையரங்குகளில் சிறப்பாக வெளியாகிவருகிறது. மேலும் குறிப்பாக இப்படமானது இளம் ரசிகர்களை கவர்ந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.