AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Rajinikanth: விமானநிலையத்தில் ரசிகர்கள் செய்த செயல்.. உறைந்து நின்ற ரஜினிகாந்த் – வீடியோ இதோ!

Rajinikanth Fan Frenzy At Chennai Airport: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தொடர்ந்து புது படங்கள் உருவாகிவருகிறது. இவர் சமீபத்தில் வேலை விஷயமாக வெளியூர் சென்ற நிலையில், மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு திரும்பினார். மேலும் அவருடன் புகைப்படம் எடுப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் குவிந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

Rajinikanth: விமானநிலையத்தில் ரசிகர்கள் செய்த செயல்.. உறைந்து நின்ற ரஜினிகாந்த் – வீடியோ இதோ!
ரஜினிகாந்த் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 16 Feb 2026 10:51 AM IST

கோலிவுட் சினிமாவில் சிறந்த நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவர் சினிமாவில் கதாநாயகனாக கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை கடந்துள்ளார். அந்த விதத்தில் இவரின் நடிப்பில் மொத்தமாக இதுவரை 171 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்ககளை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கத்தில் ஜெயிலர் 2 (Jailer 2) படத்தில் நடித்துவந்த நிலையில், ரஜினி தனது காட்சிகளுக்கான ஷூட்டிங்கை முடித்துவிட்டார். இதையடுத்து இயக்குநர் சிபி சக்கரவர்த்தி (Cibi Chakaravarthi) இயக்கத்தில், தலைவர் 173 (Thalaivar 173) என்ற படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் விமான நிலையத்தில் (Chennai Airport) ரஜினிகாந்த் க்ளீன் ஷேவ் லுக்கில் வந்திருந்தார். அந்த விதத்தில் அவர் வேலை விஷயமாக வெளியூர் சென்ற நிலையில், மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் சென்னை திரும்பிய ரஜினிகாந்துடன் புகைப்படங்கள் எடுப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் கூடி, அவரை திக்குமுக்காட செய்துள்ளனர். மேலும் ரசிகர்களும் மகிழ்ச்சியாக அவருடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க : ஜி.வி.பிரகாஷின் ‘ஹேப்பி ராஜ்’ பட சூப்பர் அப்டேட் – காமெடியுடன் வெளியான புரோமோ இதோ!

ரஜினிகாந்திடம் போட்டோ எடுப்பதற்கு கூடிய ரசிகர்கள் கூட்டம் தொடர்பான வீடியோ:

ரஜினிகாந்தின் புது திரைப்படம் குறித்த தகவல் :

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கை முடித்த நிலையில், கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகவுள்ள தலைவர் 173 என்ற படத்தில் இணைகிறார். இப்படத்தை டான் திரைப்படத்தை இயக்கி ஹிட் கொடுத்த இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துவருகிறார். ரஜினியின் தலைவர் 173 திரைப்படமானது, ஹாலிவுட்டில் வெளியான “தி அவுட்பிட்” (The Outfit)  என்ற படத்தில் தமிழ் ரீமேக் படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: திடீரென திருமணம் செய்துகொண்ட பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை – குவியும் வாழ்த்துக்கள்!

இப்படத்தை ரஜினிகாந்த் டெய்லர் வேடத்தில் நடிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இப்படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், ஷூட்டிங் வரும் 2026 மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரஜினிகாந்த் தனது அடுத்த திரைப்படங்களுக்கான கதைகளையும் கேட்டுவருவதாக கூறப்படுகிறது. தலைவர் 173 திரைப்படத்தை அடுத்ததாக ரஜினிகாந்த், தெலுங்கு பிரபல இயக்குநரின் இயக்கத்திலும் புது படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us