Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Happy Raj Movie: ஜி.வி.பிரகாஷின் ‘ஹேப்பி ராஜ்’ பட சூப்பர் அப்டேட் – காமெடியுடன் வெளியான புரோமோ இதோ!

Happy Raj Movie First Single: தென்னிந்திய சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இருந்துவருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து படங்கள் வெளியாகிவரும் நிலையில், ஹேப்பி ராஜ் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் முதல் பாடல் எப்போது ரிலீஸாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Happy Raj Movie: ஜி.வி.பிரகாஷின் ‘ஹேப்பி ராஜ்’ பட சூப்பர் அப்டேட் – காமெடியுடன் வெளியான புரோமோ இதோ!
ஹேப்பி ராஜ் படத்தின் முதல் பாடல் புரோமோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 15 Feb 2026 20:34 PM IST

நடிகராகவும், சிறந்த இசையமைப்பாளராகவும் இருந்துவருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar). இவர் நடிகராக தொடர்ந்து பல படங்களில் நடித்துவருகிறார். அந்த விதத்தில் இவரின் நடிப்பில் இறுதியாக பிளாக்மெயில் (Blackmail) என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது குழந்தை கடத்தல் தொடர்பான கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. அந்த வகையில் இப்படத்தை அடுத்ததாக கலக்கல் காமெடி மற்றும் பொழுதுபோக்கு காதல் திரைப்படமாக தயாராகியுள்ளதுதான் ஹேப்பி ராஜ் (Happy Raj). இந்த திரைப்படத்தை மரிய ராஜா இளஞ்செழியன் (Maria Raja Elanchezian) இயக்கியுள்ளார். மேலும் இடத்தி பியாண்ட் பிக்ச்சர்ஸ் என்ற நிறுவனமானது தயாரித்துள்ளது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக லவ்வர் படத்தில் நடித்த ஸ்ரீ கௌரி பிரியா (Sri Gouri Priya) நடித்துள்ளார்.

மேலும் இப்படத்திற்கு இசடையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் (Justin Prabhakaran) இசையமைத்துவரும் நிலையில், முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஹேப்பி ராஜா பட முதல் பாடலான “ஆடினே இருப்பேன்” (Aadiney Irupen) வரும் 2026 பிப்ரவரி 17ம் தேதியில் வெளியாகுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு குறித்து வெளியான காமெடி புரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: குடும்பத்தினருடன் ஜார்ஜ் குட்டி… வைரலாகும் த்ரிஷம் 3 படத்தின் நியூ போஸ்டர்

ஜி.வி. பிரகாஷ் குமாரின் ஹேப்பி ராஜ் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்து வெளியான அறிவிப்பு பதிவு :

ஹேப்பி ராஜ் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த புரோமோ காமெடி காட்சிகளுடன் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் பிக்பாஸ் புகழ் கானா வினோத், நடன இயக்குமர் மணி, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் இடம்பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: அஜித் குமாருடன் அடுத்த படமா? – ரகசியத்தை உடைத்த சிறுத்தை சிவா!

இப்படத்தின் முதல் பாடலை பிக் பாஸ் புகழ் கானா வினோத் பாடியுள்ள நிலையில், அந்த பாடலுக்கு மணிகண்டன் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளாராம். அந்த விதத்தில் ஹேப்பி ராஜ் படத்தின் முதல் பாடலான “ஆடினே இருப்பேன் ” வரும் 2026 பிப்ரவரி 17ம் தேதியில் மாலை 5 மணிக்கு வெளியாகுவதாக அறிவித்துள்ளது.

ஹேப்பி ராஜா படத்தின் ரிலீஸ் எப்போது :

இந்த் ஹேப்பி ராஜ் படமானது முழுக்க பொழுதுபோக்கு காதல் திரைப்படமாக தயாராகியுள்ளது. இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் ஸ்ரீ கௌரி பிரியா போன்ற பிரபலங்களுடன் அப்பாஸ், ஜார்ஜ் மரியா, கீதா கைலாசம், மதுரை முத்து, அதிர்ச்சி அருண் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இதில் நடிகர் அப்பாஸ் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின் தமிழில் மீண்டும் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், வரும் 2026 ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.