Happy Raj: ஜி.வி.பிரகாஷின் ‘ஹேப்பி ராஜ்’ பட ஷூட்டிங் நிறைவு.. படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ!
Happy Raj Movie Shooting Wrapped: தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராகவும், கதாநாயகனாகவும் கலக்கிவருபவர்தான் ஜி.வி. பிரகாஷ் குமார். இவரின் நடிப்பில் வித்தியாசமான காதல் கதைக்களத்தில் தயாராகிவரும் படம் ஹேப்பி ராஜ். இப்படத்தின் ஷட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இசையமைப்பாளராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் பிரபலமாகி இருந்துவருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV.Prakash Kumar). இவரின் நடிப்பில் இதுவரைக்கும் 25 படங்களுக்கும் மேல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம்தான் பிளாக்மெயில் (Blackmail). அதிரடி திரில்லர் மற்றும் கடத்தல் தொடர்பாக வெளியான இப்படம் இவருக்கு அந்தளவிற்கு வரவேற்பை கொடுக்கவில்லை. இந்நிலையில் தொடர்ந்து காதல், நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் போன்ற கதைகளுக்கு முக்கியம் கொடுத்துவருகிறார். அந்த வகையில் திரிஷா இல்லனா நயன்தாரா பட பணியில் இவர் புதியதாக நடித்துவந்த படம்தான் ஹேப்பி ராஜ் (Happy Raj). இப்படத்தை அறிமுக இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன் (Maria Raja Elanchezian) இயக்கியுள்ள நிலையில், பியோன்ட் பிக்ச்சர்ஸ் என்ற நிறுவனமானது தயாரித்துவருகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பமான நிலையில், கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதியான இன்று முழுமையாக நிறைவடைந்ததாக படக்குழு அறிவிப்ப வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து ஸ்பெஷல் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.




இதையும் படிங்க: ரேஸ்-னா ரொம்ப பிடிக்கும்… நான் அவரின் மிகப்பெரிய ரசிகை- உற்சாகமாக பேசிய ஸ்ரீலீலா!
ஹேப்பி ராஜா பட ஷூட்டிங் நிறைவு குறித்து ஸ்பெஷல் வீடியோ பதிவு:
Gear up for a fun-filled entertainer! 🎉 #HappyRaj shoot wrapped!🎬✨
🎶 @justin_tunes @gvprakash @srigouripriya @actorabbas #GeorgeMaryan #MariaElanchezian @beyondoffcl @jaivarda04 @SureshJaikanth @EditorSelva @kailasam_geetha @madhandop… pic.twitter.com/3jaVFYRKA7
— Saregama South (@saregamasouth) January 6, 2026
ஹேப்பி ராஜா படத்தில் கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக லவ்வர் படத்தில் நடித்த நடிகை ஸ்ரீ கௌரி பிரியா நடித்துள்ளார். இந்த ஜோடி இப்படத்தின் மூலமாக முதல் முதலில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் நடிகர் அப்பாஸ் மற்றும் ஜார்ஜ் மரியான் போன்ற பிரபலங்களும் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நடிகர் அப்பாஸ் இப்படத்தின் மூலமாக சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துவருகிறார்.
இதையும் படிங்க: கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் சொன்ன விசயம் – வைரலாகும் தகவல்
இந்த படமானது தற்போது உள்ள காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. ஒரு காதலால் இரு குடும்பங்களிடையே நடக்கும் பிரச்சனையை மையப்படுத்தி இப்படம் தயாராகியுள்ளதாக தெரிகிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், 2026ம் ஆண்டு பிப்ரவரி இறுதி அல்லது கோடைக்காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அப்டேட் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.