கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் சொன்ன விசயம் – வைரலாகும் தகவல்
Karuppu Movie Release Update: தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் கருப்பு. இந்தப் படம் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் புதிதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ரெட்ரோ. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தனது 45-வது படத்திற்காக இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி உடன் கூட்டணி வைத்தார் நடிகர் சூர்யா. அதன்படி முன்பு சூர்யா 45 என்று அழைக்கப்பட்டு வந்த இந்தப் படம் தற்போது கருப்பு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் தோன்ற உள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படம் கடந்த 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தில் இருந்து இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் பாடல் மட்டுமே வெளியானது. அதனைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகைக்கும் படம் வெளியாகவில்லை.




கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் சொன்ன விசயம்:
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பேசியதாவது, கருப்பு படத்தின் தயாரிப்பாளர் பிரபு என்னிடம் பேசும் போது சொன்னதாவது பொங்கல் பண்டிகைக்கு ஜன நாயகன் மற்றும் பராசக்தி என இரண்டு படங்கள் வெளியாவதால் கருப்பு வெளியிட திட்டமில்லை. தொடர்ந்து ஜனவரி மாதம் இறுதியில் அல்லது பிப்ரவரி மாதம் கருப்பு படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… ரசிகர்கள் மற்றும் பிரபலங்களும் கொண்டாடும் சிறை படத்தின் கதை என்ன?
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#Karuppu – Producer confirms that they are planning to release the film on February 🤝 pic.twitter.com/QKzhHyvYx2
— AmuthaBharathi (@CinemaWithAB) January 6, 2026
Also Read… தளபதி வெற்றி கொண்டான்… ஜன நாயகன் பட ட்ரெய்லரைப் பாராட்டிய ரவி மோகன்