தளபதி வெற்றி கொண்டான்… ஜன நாயகன் பட ட்ரெய்லரைப் பாராட்டிய ரவி மோகன்
Actor Ravi Mohan: நடிகர் ரவி மோகன் நடிப்பில் அடுத்ததாக பராசக்தி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பராசக்தி. இதில் அவர் வில்லனாக நடித்துள்ள நிலையில் அதே நேரத்தில் வெளியாக உள்ள ஜன நாயகன் படத்தின் ட்ரெய்லரை ரவி மோகன் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் ரவி மோகன். இவரது நடிப்பில் இந்த ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் இவரது நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் பராசக்தி. இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகர் ரவி மோகன் வில்லனாக நடித்துள்ளார். இவரின் கதாப்பாத்திரம் மிகவும் இண்டென்சிவாக இருக்கும் என்று படக்குழுவினர் தொடர்ந்து பேட்டிகளில் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தப் படம் வருகின்ற 10-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முன்னதாக படம் 14-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு வெளியிடுவதாக தெரிவித்து ரிலீஸ் தேதியை பின்பு மாற்றியது படக்குழு.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் படம் 09-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் போட்டியாக பராசக்தி படம் வெளியாகிறது என்று சினிமா வட்டாரங்களிலும் ரசிகர்களும் தொடர்ந்து தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் பராசக்தி படக்குழுவினர் தொடர்ந்து ஜன நாயகன் படம் குறித்து பேசுவது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




ஜன நாயகன் பட ட்ரெய்லரைப் பாராட்டிய ரவி மோகன்:
அதன்படி முன்னதாக இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் இது ஜன நாயகன் – பராசக்தி பொங்கல் இல்லை அண்ணன் தம்பி பொங்கல் என கூறி போட்டிப் போடவில்லை என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் தற்போது தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தின் ட்ரெய்லரைப் பகிர்ந்து பாராட்டியுள்ளார். இது தற்போது ரசிகர்களிடிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… மை நியூ லுக்… இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிட்ட இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான்!
நடிகர் ரவி மோகன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
தளபதி வெற்றி கொண்டான்🔥#JanaNayagan 🧨 @actorvijay Anna, you have already won for me. In everything.
The trailer is super realistically You and I’m sure this movie is winning the hearts of many including me, your forever fan and brother 💪🏼
My best wishes to #HVinoth brother,…
— Ravi Mohan (@iam_RaviMohan) January 5, 2026
Also Read… சினிமாவில் தளபதி விஜயின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்