Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மை நியூ லுக்… இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிட்ட இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான்!

Music Director A.R. Rahman: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகும் பாடல்கள் தொடர்ந்து தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அலவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் இவரது இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

மை நியூ லுக்… இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிட்ட இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான்!
ஏ.ஆர்.ரஹ்மான்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Jan 2026 17:39 PM IST

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது பான் இந்திய அளவில் பிரலமான இசையமைப்பாளராக வலம் வருகிறார். தொடர்ந்து இந்தியாவின் அடையாளமாக வலம் வரும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பான் இந்திய அளவில் தொடர்ந்து பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவந்த்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் கடந்த 1992-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன ஏ.ஆர்.ரஹ்மான் தொடர்ந்து 33 ஆண்டுகளுக்கு மேலாக பல நூறு படங்களுக்கு பாடல்களை இசையமைத்து உள்ளார். தனது இசையால் தொடர்ந்து இரண்டு ஆஸ்கர் விருதை ஒரே நேரத்தில் பெற்று ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரது இசையில் இறுதியாக திரையரங்குகளில் வெளியனா படம் தேரே இஸ்க் மெய்ன். இந்தி மொழியில் உருவான் இந்தப் படம் பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

நடிகர் தனுஷ் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதன்படி கடந்த 2025-ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பாடல்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல தற்போது 2026-ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகும் பாடல்களும் வெற்றிப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்:

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர் பிரபு நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் மூன் வால்க். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைப்பெற்றது. இதுவரை எந்த படத்திலும் இல்லாத விதமாக இந்த மூன் வால்க் படத்தில் அனைத்து பாடல்களையும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தது மட்டும் இன்றி பாடல்கள் அனைத்தும் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு தனது நியூ லுக் என்று தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக தொடர்ந்து க்ளீன் ஷேவில் இருந்த ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது தாடி வளர்ப்பது அந்த புகைப்படத்தைப் பார்க்கும் போது தெரிகிறது.

Also Read… கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்தப் படம் இப்படிதான் இருக்குமாம் – என்ன சொல்லி இருக்கார் பாருங்க

ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by ARR (@arrahman)

Also Read… வளர்ச்சி என்பது வசூல் ரீதியாக அல்ல, கதை விஷயத்தில் இருக்க வேண்டும் – இயக்குநர் சிதம்பரம்