விஜய் சேதுபதி கொடுத்த ரெட் கார்ட்… அதிரடியாக வெளியேற்றப்பட்ட பார்வதி – கம்ருதீன்.. இணையத்தை தெறிக்கவிடும் புரோமோ!
Bigg Boss Season 9: தமிழில் இதுவரை வெளியான சீசனில் இந்த பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் மீதுதான் அதிக விமர்சனங்கள் வெளியாகிவந்தது. அந்த வகையில் நேற்று நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் கடுமையாக நடந்துகொண்ட நிலையில், இருவர் குறித்து மக்களிடையே விமர்சனங்கள் வந்தது. இன்று நடைபெற்ற வார இறுதி நிகழ்ச்சியில் பார்வதி மற்றும் கம்ருதீனுக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 அக்டோபர் மாதம் 5ம் தேதி முதல் தொடங்கி மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பப்பட்டுவந்த நிகழ்ச்சிதான் பிக் பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil). இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்தே, மக்களிடையே எதிர்மறையான விமர்சனங்கள் தொடர்ந்து வந்தது என்றே கூறலாம். மற்ற சீசன்களை ஒப்பிடும்போது இந்த சீசனில் போட்டியாளர்களிடையே சரியான நெறிமுறை இல்லை, நடத்தை இல்லை என்றே விமர்சனங்கள் வெளியாகிவந்தது. பின் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வந்த பிறகும் எந்த மாற்றமும் இல்லை. அந்த வகையில் இந்த சீசனில் அதிக எச்சரிக்கைகளை பெற்றவர்களாக பார்வதி (Parvathy) மற்றும் கம்ருதீன் (kamruddin) இருவரும் இருந்தனர். இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில், பலமுறை பிக்பாஸால் எச்சரிக்கப்பட்டிருந்தனர். அந்த வகையில் நேற்று 2026 ஜனவரி 2ம் தேதியில், டிக்கெட் டூ பினாலேக்கான (Ticket to Finale) கார் டாஸ்க் ஒன்று நடந்தது.
இந்த டாஸ்கின்போது, கம்ருதீன் மற்றும் வி.ஜே.பார்வதி இருவரும் சாண்ட்ராவை (Sandra) அந்த காரில் இருந்து வலுக்கட்டாயமாக கீழ் தள்ளினார்கள். இதை எதிர்த்து மற்றப் போட்டியாளர் மற்றும் ஆடியன்ஸ் குரல் கொடுத்துவந்த நிலையில், இன்று 2026 ஜனவரி 3ல் வெளியான 2வது புரோமோ பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.




இதையும் படிங்க: பராசக்தி படத்திற்கு UK-வில் வரவேற்பு.. ப்ரீ-புக்கிங்கில் தெறிக்கவிடும் பராசக்தி!
பிக் பாஸ் சீசன் 9 தமிழில் 90வது நாளில் வெளியான 2வது புரோமோ பதிவு :
#Day90 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/pQfMdynnI0
— Vijay Television (@vijaytelevision) January 3, 2026
இந்த வீடியோவில் பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரையும் விஜய் சேதுபதி கடுமையாக தாக்கி பேசியிருந்தார். அதில் அவர் நீங்கள் கார் டாஸ்கில் செய்ததை உங்கள் வீட்டில் உங்கள் அம்மா மற்றும் அக்கா உங்களை கொண்டாடி வரவேற்பார்கள் என வஞ்சப்புகழ்ச்சி அணி போல் பேசியிருந்தார். மேலும் பேசிக்கொண்டிருந்த விஜய் சேதுபதி கம்ருதீன் மற்றும் வி.ஜே.பார்வதி இருவருக்குமே ரெட் கார்ட் கொடுத்துள்ளார். இதன் காரணமாக அதிரடியாக இந்த பிக் பாஸ் சீசன் 9ல் இருந்து இருவருமே வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கம்ருதீன்- பார்வதிக்கு ரெட் கார்ட் கிடைக்குமா? இணையத்தில் கொதிக்கும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள்!
இது தற்போது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல வாரங்களாக பார்வதி மற்றும் கம்ருதீன் செயலால் ரசிகர்கள் பெரும் கடுப்பில் இருந்த நிலையில், 90வது நாளில் இருவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பிக் பாஸ் சீசன் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.