AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புறநானுறு படத்தில் விட்டதை சூர்யா 46ல் பிடித்த வெங்கி அட்லூரி.. கேமியோ வேடத்தில் இவரா?

Suriya46 Movie Update: தெலுங்கு சினிமாவில் நடிகர் சூர்யா நடித்துவந்த படம்தான் சூர்யா46. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படமாக தயாராகிவரும் நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்திருந்தது. அந்த வகையில் இப்படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது யார் என விவரமாக பார்க்கலாம்.

புறநானுறு படத்தில் விட்டதை சூர்யா 46ல் பிடித்த வெங்கி அட்லூரி.. கேமியோ வேடத்தில் இவரா?
சூர்யா46 படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 03 Jan 2026 13:15 PM IST

தமிழ் சினிமாவில் மிகவும் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம்தான் சூர்யா46. இந்த திரைப்படத்தை வாத்தி (vaathi) மற்றும் லக்கி பாஸ்கர் (Lucky Bhaskar) போன்ற படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 மே மாதத்திலே தொடங்கிய நிலையில், கடந்த 2025 டிசம்பர் தொடக்கத்தில் முழுமையாக நிறைவடைந்தது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே இயக்குநர் பாலாவின் வணங்கான் படத்தில் இணைந்து நடிக்கவிருந்த நிலையில், பின் சில காரணங்களால இருவருமே விலகினார்கள்.

அந்த வகையில் மீண்டும் சூர்யா46 படத்தின் மூலம் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த படமானது சுமார் ரூ 150 முதல் ரூ 200 கோடி பட்ஜெட்டில் தயாராகிவருகிறதாம். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல தென்னிந்திய நடிகர் ஒருவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம். அந்த நடிகர் யார் தெரியுமா?, வேறுயாருமில்லை நடிகர் துல்கர் சல்மான்தான்.

இதையும் படிங்க: இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கும் ‘டிமாண்டி காலனி 3’ பட செகண்ட் லுக் போஸ்டர்..!

சூர்யா46 படத்தின் ஷூட்டிங் நிறைவு குறித்து வெளியான பதிவு:

புறநானுறு படத்தில் விட்டதை சூர்யா46ல் பிடித்த துல்கர் சல்மான் :

நடிகர் துல்கர் சல்மான் மற்றும் சூர்யா இருவரும் இணைந்து புறநானுறு, தற்போது பராசக்தி என தயாராகியுள்ள படத்தில் முதல் முதலில் நடிக்கவிருந்தனர். இதில் சிவகார்த்திகேயன் நடித்த வேடத்தில் சூர்யாவும், அதர்வா நடித்திருக்கும் வேடத்தில் துல்கர் சல்மானும் இணைந்து நடிக்கவிருந்தனர். இந்த படத்தின் பட்ஜெட் அதிகமாகும் என்ற காரணத்தால் சூர்யா இப்படத்தை தயாரிப்பதிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிப்பதற்கு அவருக்கு தொடர்ச்சியான நேரமும் இல்லை என்பதால் அவர் இப்படத்திலிருந்து விலகினார் என இயக்குனர் சுதா கொங்கரா தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: திரைப்படங்களின் வெற்றிக்கு அதிர்ஷ்டம்தான் காரணமா? – அசத்தல் பதிலளித்த க்ரித்தி ஷெட்டி!

இதன் காரணமாக துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா இருவருமே இப்படத்திலிருந்து விலகினார்கள். அதை அடுத்து தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் தயாராகிவரும் சூர்யா46ல் துல்கர் சல்மான் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம். இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா46 படமானது தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் இருக்கும் நிலையில், 2026ம் ஆண்டில் கோடைக்காலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.