Demonte Colony 3: இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கும் ‘டிமாண்டி காலனி 3’ பட செகண்ட் லுக் போஸ்டர்..!
Demonte Colony 3 Second Look: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஆர்.அஜய் ஞானமுத்து. இவரின் இயக்கத்தில் வெளியாகி தொடர் வெற்றியை பெற்றுவரும் படம்தான் டிமாண்டி காலனி சீரிஸ். இப்படதொகுப்பிலிருந்து 3வது பாகம் தயாராகிவரும் நிலையில், இதன் 2வது பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் அருள்நிதியின் (Arulnithi) நடிப்பில் தமிழ் சினிமாவில் மக்களிடையே வரவேற்பை பெற்ற படம்தான் டிமாண்டி காலனி (Demonte Colony Universe). இந்த டிமாண்டி காலனி படத்தின் முதல் பாகம் கடந்த 2015ம் ஆண்டி வெளியாகியிருந்தது. இந்த படமானது வெளியீட்டின் போது பெருமளவு வரவேற்பை பெற்றது. இப்படம் ரிலீசாகி கிட்டத்தட்ட 9 வருடத்திற்கு பின் டிமாண்டி காலனி 2 படம் கடந்த 2024ல் வெளியாகியிருந்தது. இதில் அருள்நிதி இரட்டை வேடத்தில் நடித்திருந்த நிலையில், முக்கிய வேடத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் (Priya Bhavani Shankar) நடித்திருந்தார். இந்த படம் 2024ம் ஆண்டு தொடக்கத்திலே வெளியாகியிருந்த நிலையில், மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது . கிட்டத்தட்ட ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இந்த படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.
மேலும் இப்படத்தின் தொடர்ச்சியாக டிமாண்டி காலனி 3 (Demonte Colony 3) படம் உருவாகிவருகிறது. இதன் முதல் பார்வை நேற்று 2026 ஜனவரி 1ம் தேதியில் புத்தாண்டை முன்னிட்டு வெளியான நிலையில், இன்று 2026 ஜனவரியில் 2ல் இப்படத்தின் 2வது பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: 2026-ம் ஆண்டில் நடிகர் ரவி மோகன் நடிப்பில் வரிசைக்கட்டும் படங்களின் லிஸ்ட் இதோ
டிமாண்டி காலனி 3 படக்குழு வெளியிட்ட செகண்ட் லுக் போஸ்டர் :
When darkness comes to rule, evil takes over 😈
Presenting the SECOND POSTER of #DemonteColony3 – “The End Is Too Far” 😱@arulnithitamil @AjayGnanamuthu @Sudhans2017 @PassionStudios_ @DangalTV @RDCMediaPvtLtd@SamCSmusic @sivakvijayan @priya_Bshankar @gurusoms @Kumaresh_editor… pic.twitter.com/C4vvkoi2U4
— Passion Studios (@PassionStudios_) January 2, 2026
இந்த போஸ்டரில் நடிகை பிரியா பவனி சங்கர் இடம்பெற்றுள்ளார். இதில் அவர் கர்ப்பமாக இருப்பதுபோன்றும், அவரை சுற்றி இரத்தமாக இருப்பது போன்றும் இந்த போஸ்டரில் காட்சிப்படுத்தாட்டுள்ளது. முதல் பார்வையில் அருள்நிதியின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகியிருந்த நிலையில், தற்போது வெளியான பிரியா பவானி சங்கரின் போஸ்டரும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் இப்படத்தின் மீதான ஆர்வத்தையும் அதிகரித்துவருகிறது.
டிமாண்டி காலனி 3 படத்தின் ரிலீஸ் எப்போது :
இந்த டிமாண்டி காலனி 3 படத்தை அஜய் ஞானமுத்து இயக்க, சாம் சி.எஸ் இசையமைத்துவருகிறார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பாகவே தயாராகிவருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக 2025 நவம்பர் மாதத்தில் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருந்துவருகிறது.
இதையும் படிங்க: நெக்ஸ்ட் டார்கெட் குழந்தைகள்தான்.. குரங்கை மையப்படுத்தி படம் எடுக்கவுள்ளேன்- இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!
முற்றிலும் திகில் கதைக்களத்துடன் உருவாகியுள்ள படம் வெளிநாடுகளிலும் படமாக்கப்பட்டுள்ளதாம். அந்த வகையில் இப்படம் 2026ம் ஆண்டில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.