Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Demonte Colony 3: 2026 புத்தாண்டு ஸ்பெஷல்… அருள்நிதியின் ‘டிமாண்டி காலனி 3’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Demonte Colony 3 First Look: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அருள்நிதி. இவரின் நடிப்பில் தொடர் அடுத்தடுத்த பாகங்களாக வெளியாகிவருவதுதான் டிமாண்டி காலாணி பட தொகுப்பு. இப்படத்தின் இறுதி பாகமான டிமாண்டி காலனி 3 படமானது தயாராகிவரும் நிலையில், தற்போது இந்த படத்தின் முதல் பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளது.

Demonte Colony 3: 2026 புத்தாண்டு ஸ்பெஷல்… அருள்நிதியின் ‘டிமாண்டி காலனி 3’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
டிமாண்டி காலனி 3Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 01 Jan 2026 15:29 PM IST

நடிகர் அருள்நிதி (Arulnithi) தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் ஹிரைப்படங்கள் தமிழில் தொடர்ந்து வெளியாகிவரும் நிலையில், ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்புகளையும் பெற்றுவருகிறடித்து. அந்த வகையில் இவருக்கு எதிர்பார்த்ததை விடவும் மிக பிரபலத்தை கொடுத்த திரைப்படம்தான் டிமாண்டி காலனி (Demonte Colony). கடந்த 2015ம் ஆண்டில் வெளியான இப்படத்தை இயக்குநர் ஆர். அஜய் ஞானமுத்து (R. Ajay Gnanamuthu) இயக்கியிருந்தார். இந்த படமானது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இப்படத்தின் 2வது பாகமானது கடந்த 2024ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் தொடர்ச்சியாக தற்போது டிமாண்டி காலனி 3 (Demonte Colony) படமும் தயாராகிவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் சென்னையில் தொடங்கியிருந்த நிலையில், முழுமையாக நிறைவடைந்துள்ளதாம். இந்த படத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி ஷங்கர் (Priya Bhavani Shankar) மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படமானது மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகிவரும் நிலையில், பேஷன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துவருகிறது. அந்த வகையில் இன்று 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் முதல் பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: என்னங்க நடக்குது பிக்பாஸ் வீட்டில்… மீண்டும் இணைந்த கம்ருதின் பார்வதி – கடுப்பாகும் சாண்ட்ரா

இயக்குநர் அஜய் ஞானமுத்து வெளியிட்ட டிமாண்டி காலனி 3 பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் :

இந்த முதல் பார்வையில் நடிகர் அருள்நிதி, வித்தியாசமான வேடத்தில் இருப்பது ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதில் அருள்நிதிதான் வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது வெளியான இந்த முதல் பார்வை பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

டிமாண்டி காலாணி 3 படத்தின் ரிலீஸ் எப்போது :

இப்படமானது சுமார் ரூ 100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாம். இந்த படத்தில் பல வெளிநாடு கலைஞர்களும் இணைந்து பணியாற்றிவருவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துவரும் நிலையில், பாடல்கள் எல்லாம் சிறப்பாகவே தயாராகியுள்ளதாம்.

இதையும் படிங்க: ஜன நாயகன் படக்குழுவின் செல்லம் மமிதா பைஜூ – இயக்குநர் எச் வினோத்

அந்த வகையில் இப்படம் இந்த 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என படக்குனு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வரும் 2026 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகி அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.