Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அஜித் குமாருக்கு 65-வது படத்திற்காக கதை சொன்ன பிரபல இயக்குநர்?

Ajith Kumar 65 Movie Update: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாக உள்ள 65-வது படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அஜித் குமாருக்கு 65-வது படத்திற்காக கதை சொன்ன பிரபல இயக்குநர்?
அஜித் குமார்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 31 Dec 2025 20:22 PM IST

கோலிவுட் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையேயும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கி இருந்தார். அஜித் குமாரின் தீவிர பக்தனாக ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லி படத்தை அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமாதிரி எடுத்து இருந்தார் என்றே கூறலாம். அஜித் குமார் நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற பலப் படங்களில் இருந்து சூப்பர் ஹிட் காட்சிகளை அதிக அளவில் குட் பேட் அக்லி படத்தில் ரீ கிரியேட் செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்கு முன்னதாக நடிகர் அஜித் குமார் நடிப்பில் விடாமுயற்சி படம் இந்த ஆண்டு வெளியானது. அந்தப் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும் போதே நடிகர் அஜித் குமார் தொடர்ந்து தனது கார் ரேஸ் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தொடர்ந்து பல கார் ரேஸ் பந்தையங்களில் கலந்துகொண்டு இந்தியாவிற்கு பெருமையையும் தேடித் தந்தார். இப்படி தொடர்ந்து கார் ரேஸ் மற்றும் படங்கள் என மாறிமாறி தனது வேலைகளை செய்து வருகிறார் அஜித் குமார். இந்த நிலையில் இவரது 64-வது படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது உறுதியாகி உள்ள நிலையில் அடுத்ததாக நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாக உள்ள 65-வது படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

அஜித் குமாருக்கு 65-வது படத்திற்காக கதை சொன்ன பிரபல இயக்குநர்?

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் FIR மற்றும் மிஸ்டர் எக்ஸ் ஆகியப் படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் இயக்குநர் மனு ஆனந்த். இவர் நடிகர் அஜித் குமாரை நேரில் சந்தித்ததாகவும் அவருக்கு 65-வது படத்திற்கான கதையை கூறியதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அதன்படி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கதில் நடிகர் அஜித் குமார் தனது 64-வது படத்தில் நடித்து முடிந்த பிறகு அஜித் குமார் தனது 65-வது படத்திற்காக இயக்குநர் மனு ஆனந்த் உடன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… டார்க் காமெடியில் ஒரு சீரியல் கில்லர் கதை… இந்த மரணமாஸ் படத்தை ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… 2025ல் ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த தென்னிந்திய பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா?