Vijay Sethupathi: அரசன் படத்திலிருந்து விலகிவிட்டேனா? – விஜய் சேதுபதி விளக்கம்!
Vijay Sethupathi About Arasan Movie Exit Rumors: விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவையும் கடந்து, தெலுங்கிலும் படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். அந்த வகையில் இவர் சிலம்பரசனின் அரசன் திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் இப்படத்திலிருந்து இவர் விலகியதாக சமீபகாலமாக தகவல்கள் பரவிவந்த நிலையில், அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல கதாநாயகனாக கலக்கிவருபவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து பிரம்மாண்ட படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவர் தற்போது தெலுங்கு சினிமாவிலும் படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் ஸ்லம்டாக் (Slum Dog) என்ற படமானது தயாராகியுள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. மேலும் இப்படத்தை வரும் 2026ம் ஆண்டு இறுதிக்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, அரசன் (Arasan) மற்றும் பாக்கெட் நாவல் (Pocket Novel) போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார். இதில் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்கத்தில், சிலம்பரசன் (Silambarasan) கதாநாயகனாக நடித்துவரும் படம்தான் அரசன். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நெகட்டிவ் கலந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் சமீப நாட்களாக இணையத்தில், விஜய் சேதுபதி அரசன் திரைப்படத்திலிருந்து விலகிவிட்டார் என தகவல்கள் வைரலாகிவந்தது. அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி, அது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.




இதையும் படிங்க: வாடிவாசல் படம் 100% நடக்கும் – மௌனம் பேசியதே தயாரிப்பாளர்
அரசன் படத்திலிருந்து விலகியதாக பரவும் தகவலுக்கு விஜய் சேதுபதி விளக்கம் :
அந்த நிகழ்ச்சியின்போது ரசிகர் ஒருவர் விஜய் சேதுபதியிரம், நீங்கள் அரசன் திரைப்படத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகிவருகிறது, அது உண்மையா? என கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “அதான் எனக்கும் தெரியவில்லை. இல்லை. வதந்திகள் எப்போதும் வேகமாகப் பரவும். இதையெல்லாம் யார் பரப்புகிறார்கள், எப்படி பரப்புகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அதை நம்ப வேண்டாம்” என அதில் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இது தொடர்பான தகவல் ரசிகர்கள் மத்தியில் தெளிவைக் கொடுத்துள்ளது.
அரசன் திரைப்படம் குறித்து சிலம்பரசன் வெளியிட்ட பதிவு :
Presenting the promo of #Arasan to you all 🙂#ARASANPromo – https://t.co/Jh7WCRRa4n#VetriMaaran @anirudhofficial @theVcreations #VCreations47 @prosathish @RIAZtheboss
— Silambarasan TR (@SilambarasanTR_) October 17, 2025
இந்த அரசன் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க, அனிருத் இசையமைத்துவருகிறார். மேலும் இதை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துவரும் நிலையில், மிக பிரம்மாண்டமான கதைக்களத்தில் தயாராகிவருகிறது. இப்படமானது தனுஷின் வட சென்னை படத்தின் ஒரு பகுதியாக தயாராகிவரும் நிலையில், இதில் வட சென்னை படத்தில் நடித்த பிரபலங்களும் இணைந்து நடித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: ‘டாக்சிக்’ படத்தில் ரெட்டை வேடத்தில் நடிக்கும் யாஷ்.. வெளியானது கதாபாத்திர அறிமுக போஸ்டர்!
இந்த் படமானது கிட்டத்தட்ட ரூ 300 கோடி பட்ஜெட்டில் தயாராகிவருகிறதாம். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் முடிந்த நிலையில், இரண்டாம்கட்ட ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் இந்த 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.