AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாடிவாசல் படம் 100% நடக்கும் – மௌனம் பேசியதே தயாரிப்பாளர்

Vaadivaasal Movie Update: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருந்த வாடிவாசல் படம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் நின்றதற்கு பல காரணங்கள் சினிமா வட்டாரங்களில் வைரலானது. இந்த நிலையில் மௌனம் பேசியதே படத்தின் தயாரிப்பாளர் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வாடிவாசல் படம் 100% நடக்கும் – மௌனம் பேசியதே தயாரிப்பாளர்
வாடிவாசல்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Feb 2026 14:55 PM IST

தமிழ் சினிமாவில் மக்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்து பிறகு படத்தின் பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டப் படம் வாடிவாசல். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடிக்க இருந்த இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான போது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டத்து. அதன்படி இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை பாகம் 2 படத்தினை முடித்த பிறகு வாடிவாசல் படத்தை இயக்குவார் என்றும் நடிகர் சூர்யா கங்குவா படத்தை தொடர்ந்து வாடிவாசல் படத்தில் இணைவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் சூர்யா அந்தப் படத்தை தொடர்ந்து ரெட்ரோ மற்றும் கருப்பு படங்களில் நடித்தார். இந்தப் படங்களைத் தொடர்ந்து வாடிவாசல் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் சூர்யா 46 படத்தில் இணைந்தார்.

இதனைத்ட் தொடர்ந்து வெற்றிமாறனும் நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் உருவாகும் அரசன் படத்தில் இணைந்தார். அதன்படி வெற்றிமாறன் தற்போது நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் உருவாகி வரும் அரசன் படத்தினை இயக்கி வருகிறார். சூர்யாவும் அடுத்தடுத்து 46, 47-வது படம் என்று மற்ற இயக்குநர்களுடன் கமிட்டாகி நடித்து வருகிறார். இதன் காரணமாக வாடிவாசல் படம் நிறுத்தப்பட்டதாகவும் அதற்கு பலக் காரணங்கள் சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் வாடிவாசல் படத்தில் அமீர் நடித்தால் தான் நடிக்க மாட்டேன் என்று சூர்யா சொன்னதாக தகவல்கள் வெளியாகி வைரலானது.

வாடிவாசல் படம் 100% நடக்கும்:

இந்த நிலையில் மௌனம் பேசியதே தயாரிப்பாளர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில், வாடிவாசல் படம் 100 சதவீதம் நடக்கும் என்று மௌனம் பேசியதே படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் அமீர் இடையே மோதல் என்ற செய்தி போலியானது என்றும் தெரிவித்தார். மேலும் மௌனம் பேசியதே படத்தின் மறு வெளியீட்டின் போது, ​​அமீரை அழைத்து சந்திக்க விரும்பியது சூர்யா தான் என்றும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Also Read… D55 Movie: தனுஷின் ‘டி55’ பட ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? – வைரலாகும் தகவல்!

இணையத்தில் வைரலாகும் மௌனம் பேசியதே பட தயாரிப்பாளரின் பேச்சு:

Also Read… விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகாவின் திருமணம் – அட இந்த பிரபலங்கள் கலந்துகொள்கிறார்களா?