திரையரங்குகளில் வெற்றிநடை போடும் இதயம் முரளி படம் – கொண்டாட்டத்தில் படக்குழு
Idhayam Murali team celebrates film success in theatres | தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி தற்போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படக்குழு கொண்டாடி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 2026-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் இதயம் முரளி. ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். மேலும் தயாரிப்பாளராக வலம் வரும் இவர் இயக்குநராக இந்த இதயம் முரளி படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் அதர்வா முரளி நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகைகள் பிரீத்தி முகுந்தன் மற்றும் கயடு லோஹர் இருவரும் நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஃபகத் பாசில், மாளவிகா மோகனன், ஜோனிதா காந்தி, அஞ்சு குரியன், தமன் எஸ், ரக்ஷன், திராவிட் செல்வம், சுதாகர், நிஹாரிகா என்.எம். ஏஞ்சலின் பி, நட்டி சுப்ரமணியம், FEFSI விஜயன், ராம்கி, சின்னி ஜெயந்த், ஜெயக்குமார், யஷஸ்ரீ ராவ், மதன்குமார் தட்சிணாமூர்த்தி, சௌந்தர்யா சரவணன், காளி வெங்கட், ஆடுகளம் நரேன், பப்லு பிரிதிவீராஜ், லொள்ளு சபா மாறன், ரைசா வில்சன், பகவதி பெருமாள், ஆதித்ய கதிர், ராகுல், ஜான் மகேந்திரன், பாரதி கண்ணன் மற்றும் சரவண சுப்பையா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.




திரையரங்குகளில் வெற்றிநடை போடும் இதயம் முரளி படம்:
அதர்வாவின் தந்தை முரளி முன்னதாக இதயம் என்ற படத்தில் நடித்து இருப்பார். அந்தப் படத்தில் அவர் காதலிக்கும் பெண்ணிடம் கடைசிவரை தனது காதலை சொல்லாமலே விட்டுவிடுவார். அதே போல இந்த இதயம் முரளி படத்திலும் அதர்வா தனது காதலை சொல்ல மிகவும் தயங்குவார். அந்த காதலுக்காக அவர் என்ன எல்லாம் செய்கிறார் இறுதியில் தனது காதலை சொன்னாரா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
Also Read… உறுதியானது ஜன நாயகன் படத்தின் ரிலீஸ்… ஒத்திவைக்கப்பட்டது இம்மார்டல் படத்தின் ரிலீஸ் தேதி!
இதயம் முரளி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The film which filled theatres with love and love only ❤️#IdhayamMurali – Lovable blockbuster in cinemas now!
🎟️ https://t.co/Mw7bvI595S@Atharvaamurali @MusicThaman @AakashBaskaran #FahadhFaasil @RedGiantMovies_ @BhavanaRelease @FutureRunup @natty_nataraj @PreityMukundan… pic.twitter.com/IMT8JGJPTT
— DawnPictures (@DawnPicturesOff) July 16, 2026
Also Read… அதர்வா நடித்த அந்தப் படத்தில் நான் தான் முதலில் நடிக்க வேண்டியது – நடிகர் அருள் நிதி ஓபன் டாக்