உறுதியானது ஜன நாயகன் படத்தின் ரிலீஸ்… ஒத்திவைக்கப்பட்டது இம்மார்டல் படத்தின் ரிலீஸ் தேதி!
GV Prakash Kumars Immortal movie has been postponed due to Jana Nayagan release: நடிகர் தளபதி விஜயின் நடிப்பில் ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஜிவி பிரகாஷ் குமாரின் இம்மார்டல் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நாயகனாகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். இவரது இசையில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அவரது நடிப்பில் வெளியாகும் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பு மற்றும் இசை என இரண்டிலும் மிகவும் பிசியாக வலம் வருகிறார். இவரது இசையில் உருவாகும் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வரிசையாக வெளியாகி வரும் நிலையில் ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்து வரும் படங்களும் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் அடுத்ததாக நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் இம்மார்டல்.
சூப்பர் நேச்சுரல் ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ளது இம்மார்டல் படம். நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை கயாடு லோஹர் நாயகியாக நடித்து உள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் மாரியப்பன் சின்னா எழுதி இயக்கி உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் படம் முன்னதாக ஜூலை 23-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.




ஒத்திவைக்கப்பட்டது இம்மார்டல் படத்தின் ரிலீஸ் தேதி:
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் ரிலீஸ் வருகின்ற 23-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் காரணமாக தற்போது இம்மார்டல் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்தி வைத்துள்ளது.
அதன்படி ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும். அதுவும் ஒன் லாஸ்ட் டைம். ஜன நாயகன் படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். மேலும் இம்மார்ட்டல் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 04-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… விஜய் ஆண்டனி ஒரு ஜென்டில்மேன் – புகழ்ந்து பேசிய திருப்பூர் சுப்ரமணியம்
ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எஸ்க் தள பதிவு:
Thalapathy vandha thalli poyi dhaaney aaganum ❤️❤️ adhuvum one
Last time ❤️ …. Best of luck team JN …#immortal will release in theatres on September 4th with ur support and love … @AKfilmfactory @DirMari_Chinna @thinkmusicindia pic.twitter.com/E8UC01vNwX— G.V.Prakash Kumar (@gvprakash) July 15, 2026
Also Read… தென்னிந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் நாயகியை மையமாக வைத்து வெளியாகும் படங்கள்