AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Mysskin: ட்ரெயின் படத்தை கமல் சார், அமீர் கான் சார் கூட பண்ண முடியாது – மிஷ்கின் பேச்சு!

Mysskin Hails Vijay Sethupathi: தமிழில் தனது வித்தியாசமான கதையை மக்களுக்கு கொடுத்து, திரை பட அனுபவத்தை சிறப்பாக கொடுப்பவர் இயக்குநர் மிஷ்கின். இவரின் இயக்கத்தில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம் ட்ரெயின். அண்மையில், இப்பட நிகழ்ச்சியில் பேசிய அவர், விஜய் சேதுபதியின் நடிப்பைப் புகழ்ந்துள்ளார்.

Mysskin: ட்ரெயின் படத்தை கமல் சார், அமீர் கான் சார் கூட பண்ண முடியாது – மிஷ்கின் பேச்சு!
மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதிImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 13 Jul 2026 13:48 PM IST

இயக்குநர் மிஷ்கின் (Director Mysskin) இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவரின் இயக்கத்தில் உருவாகும் படங்களின் கதைகளும் வித்தியாசமாக இருக்கும். இறுதியாக இவரின் இயக்கத்தில் வெளியான படம் சைக்கோ (Psycho). 2020ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு பின் இயக்குநராக ட்ரெயின் (Train) மற்றும் பிசாசு 2 (Pisassu 2) போன்ற படங்களை மிஷ்கின் இயக்கியிருந்தாலும், இன்னும் வெளியாகவில்லை. இதில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசனின் (Shruti Haasan) நடிப்பில் உருவாகியுள்ளதுதான் ட்ரெயின்.

இப்படமானது ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள நிலையில், சிறப்பாக அமைந்துள்ளது. இதன் டீசர் ரிலீஸ் மற்றும் ஆடியோ லான்ச் என இரு நிகழ்ச்சியும் நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின், ட்ரெயின் படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: அரசியலை 100 சதவீதம் பின்பற்றுவேன்.. ஆனால் – அதர்வா சொன்ன விஷயம்!

ட்ரெயின் படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு குறித்து பேசிய இயக்குநர் மிஷ்கின்:

அந்த நிகழ்ச்சியின்போது பேசிய மிஷ்கின், இந்த படத்தை விஜய் சேதுபதியை தவிர எந்த நடிகராலும் நடித்திருக்க முடியாது. ஏன் கமல் சாரினாலும் முடியாது, ஆமீர் கான் சாரினாலும் நடிக்க முடியாது. ஏனென்றால் இந்த கதை ஒருவருக்காக எழுதப்பட்டது. அதன் விஜய் சேதுபதிக்காக எழுதப்பட்டடித்து. விஜய் சேதுபதி ஒரு எரிமலை மாதிரி. நான் இப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கையில் புதிதாக தெரிகிறது. என்னுடைய படம் என்பதால் நல்ல படம் என சொல்லல.

இதையும் படிங்க: அதற்காகவே ஜன நாயகன் படத்தை பார்ப்பேன் – நடிகர் பேசில் ஜோசப் பேச்சு!

நீங்க படம் பார்த்துவிட்டு நல்ல இல்லை என்றால் செருப்பை கழட்டி அடிங்க. மேலும் இப்படம் நல்ல இருந்தால் ஓடும், அது எனக்கு தெரியும். இதில் விஜய் சேதுபதி சிறப்பாக நடித்துள்ளார். அவரின் கதாபாத்திரமும் சூப்பராக உள்ளது. எனது வாழ்க்கையில் லாரன்ஸ் ஒளிவியே, ஒரு மிஃபுனே அவர்களுடன் பணியாற்றமுடியவில்லை, ஆனால நான் விஜய் சேதுபதியுடன் பணியாற்றியிருக்கிறேன்” என அதில் அவர் கூறியிருந்தார்.

ட்ரெயின் படத்தின் டீசர் குறித்து விஜய் சேதுபதி வெளியிட்ட எக்ஸ் பதிவு:

விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் கூட்டணியில் ட்ரெயின் படமானது தயாராகியுள்ளது. இப்படமானது அதிரடி திரில்லர், ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள நிலையில், எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us