Train Movie: ஆக்ஷன் திரில்லர் பாணியில்.. விஜய் சேதுபதியின் ட்ரெயின் பட டீசர் ரசிகர்கள் மத்தியில் வைரல்!
Train Movie Teaser Goes Viral: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பிலும், இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்திலும் புதிதாக உருவாகியிருக்கும் படம் ட்ரெயின். இந்த படமானது வெளியீட்டிற்கு தயாராகிவரும் நிலையில், இதன் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
தென்னிந்திய சினிமாவில் ஹீரோவாக, வில்லனாகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் சிறப்பாக உருவாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii). இயக்குநர் பாண்டிராஜ் (Pandiraj) இயக்கத்தில், கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகியிருந்த இப்படமானது ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இந்த படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்துவந்த புது திரைப்படம்தான் ட்ரெயின் (Train). இயக்குநர் மிஷ்கின் (Mysskin) இயக்கத்தில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படம் தயாராகிவந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் (Shruti Haasan) உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர்.
இப்படமானது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் நிலையில், எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த விதத்தில், தற்போது இப்படத்தி டீசர் ரிலீஸ் மற்றும் ஆடியோ லான்ச்சை படக்குழு ஒன்றாக நடத்தியுள்ளது. தற்போது இப்படத்தின் புது டீசர் வெளியாகியிருக்கும் நிலையில், அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: அந்த படத்தை இயக்கியது மிகப்பெரிய தவறு – இயக்குநர் லிங்குசாமி
விஜய் சேதுபதி வெளியிட்ட ட்ரெயின் திரைப்படத்தின் டீசர் வீடியோ குறித்த பதிவு:
The journey begins!
Experience the high-octane #Train teaser now https://t.co/4XYhEZqP2i@mysskindirector @shrutihaasan @nasser_kameela @ksravikumardir @ira_dayanand @itsNarain @preethy_karan @KalaiActor #YugiSethu @fowziafathima @editorsriwat #TapasNayak #StreetLight… pic.twitter.com/lxRYcQKpWN— VijaySethupathi (@VijaySethuOffl) July 12, 2026
ட்ரெயின் படத்தின் கதை இதுவா:
இந்த படத்தின் டீசர் வெளியாகியிருக்கும் நிலையில், இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படமானது கொஞ்சம், தனுஷின் தொடரி படத்தின் சாயலில் இருக்கிறது என கூறலாம். இப்படமும் முழுக்க ட்ரெயினில் நடக்கும் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி, நாசர், ஸ்ருதிஹாசன் மற்றும் இரா தயானந்த் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். ஆக்ஷன், திரில்லர், விறுவிறுப்பு போன்ற கதைக்களத்தில் இப்படமானது அமைந்திருப்பதாக தெரிகிறது.
ட்ரெயின் படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் :
கோலிவுட் சினிமாவில், 2026ம் ஆண்டு ஜூலை மாதம் பெரும் கொண்டாட்டத்தை கொண்ட மாதமாக இருக்கிறது. இந்த மாதத்தில் (ஜூலை) முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் படமானது கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: கத்தி படத்தில் அந்த பாடலை வைக்காததற்கு என்ன காரணம்? இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்
மேலும் ஆகஸ்ட் மாதத்தின் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் , ஆகஸ்ட் இறுதியில் டாக்ஸிக் என தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் வெளியாக காத்திருக்கிறது. இந்த பிஸியான சமயத்தில் விஜய் சேதுபதியின் ட்ரெயின் படம் எப்போது வெளியாகும் என இன்னும் படக்குழு அறிவிக்கவில்லை. இப்படம் வரும் 2026ம் ஆகஸ்ட் தொடக்கத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.