அந்த படத்தை இயக்கியது மிகப்பெரிய தவறு – இயக்குநர் லிங்குசாமி
Director Lingusamy talks about sandakozhi 2 movie | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் லிங்குசாமி. இவர் தான் இயக்கிய சண்டகோழி 2 படம் ஒரு மிகப்பெரிய தவறு என்று வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் லிங்குசாமி. இவரது இயக்கத்தில் தமிழ் மொழியில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னதாக இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி திரையரங்குகளில் வெளியான படம் ரன். இந்தப் படம் முன்பு வெளியான போதே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் மாதவன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை மீரா ஜாஸ்மின் நாயகியாக நடித்து இருந்தார். இந்த நிலையில் இந்தப் படத்தை தற்போது 4கே வடிவில் உருவாக்கி மீண்டு திரையரங்குகளில் வெளியிட்டுள்ளனர். அதன்படி நேற்று 10-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு ரன் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் படத்தைப் தற்போது திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். திரையரங்கு முழுவதும் இந்த ரன் படத்தைப் பார்த்து ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வரும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையேயும் படக்குழுவினர் இடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
அந்த படத்தை இயக்கியது மிகப்பெரிய தவறு:
இந்த நிலையில் இயக்குநர் லிங்கு சாமி சமீபத்தில் அளித்த பேட்டி இணையத்தில் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த பேட்டியில் இயக்குநர் லிங்குசாமியிடம் ரன் படத்தின் பாகம் இரண்டு உருவாகுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குநர் லிங்குசாமி, நான் ஏற்கனவே அந்தத் தவறை ஒருமுறை செய்துவிட்டேன். ‘சண்டக்கோழி 2’ படத்தை உருவாக்கியது ஒரு தவறு. ‘சண்டக்கோழி’, ‘ரன்’ போன்ற படங்கள் காலத்தால் அழியாத காவியங்கள். அவற்றை நாம் தொடக்கூடாது. ‘ரன்’ படம் மீண்டும் திரையிடப்படலாமே தவிர, அதன் இரண்டாம் பாகம் எதுவும் இருக்காது என்று வெளிப்படையாக பேசியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… அப்போ ஜன நாயகன் படத்தை இந்த வயதினர் மட்டும் தான் பார்க்க முடியுமா? வெளியானது சென்சார் அப்டேட்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
When asked whether Run 2 would happen, director #Lingusamy replied:
“I have already made that mistake once. Making Sandakozhi 2 was a mistake.
Films like Sandakozhi and Run are classics. We shouldn’t touch them.
Run will only be re-released; there will be no second part.”… pic.twitter.com/SMlRHLqiOY
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) July 10, 2026
Also Read… பென்ஸ் படத்தில் நிறைவடைந்தது முக்கிய நடிகர்களின் ஷூட்டிங் – வைரலாகும் தகவல்



