சந்தானத்தின் லவ் பைட் படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் தகவல்
Santhanam Love Bite movie shooting update | தமிழ் சினிமாவில் தற்போது வரவேற்பைப் பெறும் படங்களில் நடித்து வரும் நடிகர் சந்தானம் தற்போது லவ் பைட் என்ற படத்தில் நடித்து வருகிறார். லவ் பைட் படத்தின் ஷூட்டிங் அப்டேட் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் நடிகர் சந்தானம் முதலில் காமெடி நடிகராகவே தனது பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து காமெடி நடிகராக பல ஹிட் படங்களை கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்கள் பலருடன் இணைந்து நடிகர் சந்தானம் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார். பல முன்னணி நடிகர்களின் படங்கள் நடிகர் சந்தானத்தின் காமெடியால் மட்டுமே சூப்பர் ஹிட் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு படத்தில் சந்தானத்தின் காமெடி இருக்கிறது என்றால் அந்தப் படம் நிச்சயமாக சூப்பராக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து பார்த்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து காமெடி நடிகராக பல ஹிட் படங்களை கொடுத்து வந்த நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் பிறகு நாயகனாக நடிக்கத் தொடங்கினார்.
அதன்படி இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு சந்தானம் பிறகு காமெடி கதாப்பாத்திரங்களை ஏற்று நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவர் நாயகனாக நடித்து வரும் நிலையில் அடுத்ததாக தற்போது நடித்து வரும் படம் லவ் பைட்.
சந்தானத்தின் லவ் பைட் படத்தின் தற்போதைய நிலை என்ன?
இந்த லவ் பைட் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இந்த லவ் பைட் படத்தை இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் எழுதி இயக்கி வருகிறார். படத்தில் நடிகர் சந்தானம் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சந்தானம் நடிக்கும் லவ் பைட் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. இதுவரை இப்படத்தின் படப்பிடிப்பில் சுமார் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளது. காரைக்குடியில் நடைபெற்று வரும் இந்தப் படப்பிடிப்பு கட்டம் ஜூலை மாத இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், இப்படம் இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ திரையரங்குகளில் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Also Read… உறுதியாகும் ஜன நாயகன் பட ரிலீஸ்… ஒத்திவைக்கப்படும் மற்றப்படங்களின் ரிலீஸ்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Santhanam‘s #LoveBite is currently being shot in Karaikudi.
Around 40% of the film has been completed so far. The ongoing Karaikudi schedule is expected to wrap up by the end of July.
Production is progressing at a brisk pace, and the film is likely to hit theatres either by… pic.twitter.com/bhetGG6xAS
— Movie Tamil (@_MovieTamil) July 10, 2026
Also Read… துல்கர் சல்மானின் 41-வது படத்தின் டைட்டில் இதுதான்… வெளியானது அப்டேட்!



