STR 51 படத்தில் சந்தானம் கேரக்டர் எப்படி இருக்கும் தெரியுமா? இயக்குநர் கொடுத்த அப்டேட்
Director Ashwath Marimuthu talks about santhanam character in STR 51 movie: தமிழ் சினிமாவில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படம் எஸ்டிஆர் 51. இந்தப் படத்தில் சந்தானத்தின் கேரக்டர் எப்படி இருக்கும் என்பது குறித்து அஸ்வத் மாரிமுத்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஓ மை கடவுளே என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார். மேலும் இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான படம் டிராகன். இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் இந்தப் படத்தின் நாயகனாக நடித்து இருந்தார். முன்னதாக இவரது நடிப்பில் வெளியான படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல இந்தப் படமும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நடிகர் சிலம்பரசன் படத்தை இயக்க உள்ளார்.
சிலம்பரசன் தற்போது அரசன் படத்தின் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக நடித்து வரும் நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் ப்ரீ புரடெக்ஷன் பணியில் அஸ்வத் மாரிமுத்து பிசியாக உள்ள நிலையில் அஸ்வத் மாரிமுத்து சமீபத்தில் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.




குட்டி டிராகன் மாதிரி சந்தானத்தின் கேரக்டர் இருக்கும்:
சிலம்பரசன் டிஆரின் எஸ்டிஆர் 51 படத்தில், சந்தானம் சாரின் கதாபாத்திரம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அது மிகவும் அற்புதமான ஒரு கதாபாத்திரமாகும். டிராகன் படத்தின்போது, நான் தயாரிப்புத் தரப்பிடம் குட்டி டிராகன் கதாபாத்திரத்தை விவரித்தபோது, அவர்கள் வாய்விட்டுச் சிரித்தனர். அதேபோலவே, எஸ்டிஆர் படத்தின் கதை விவரிப்பின்போது சந்தானம் சாரின் கதாபாத்திரத்தைக் கேட்டு அவர்கள் பெரிதும் ரசித்தனர். கதை விவரிப்பு முடிந்த பிறகு, தயாரிப்புக் குழுவினர் எஸ்டிஆர் படம் குறித்து மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் என்றும் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Ajith Kumar: இனி ஹீரோ மட்டும் கிடையாது.. அஜித் குமாரின் புதிய அவதாரம்.. என்னனு தெரியுமா?
இணையத்தில் வைரலாகும் அஸ்வத் மாரிமுத்து பேச்சு:
#AswathMarimuthu:
“#Santhanam sir character in #SilambarasanTR‘s #STR51 has shaped up so well👌. It’s a very amazing character. During #Dragon when I narrated the ‘KuttyDragon’ character to the production, they busted with Laughter😁. As like same they enjoyed for Santhanam sir… pic.twitter.com/QdSRrbjAmC— AmuthaBharathi (@CinemaWithAB) March 23, 2026
Also Read… Youth: இன்றைய தலைமுறைக்கு ஏற்ற திரைப்படம்.. கென் கருணாஸின் யூத் படத்தை பாராட்டிய சிலம்பரசன்!