திடீரென தனியாக மும்பை செல்லும் விஜய் – இதுதான் காரணமா?
Jana Nayagan Post Production Work: நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் மார்ச் 20, 2026 அன்று மும்பை செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஜனநாயகன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பங்கேற்க செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள விஜய், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களம் காணவிருக்கிறார். இதனையடுத்து திரையுலகில் புகழ்பெற்ற நடிகரான அவர் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. ஆனால் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், ஜனநாயகன் பட சென்சார் பிர்சனை என அவர் தொடர்ந்து பிரச்னைகளை சந்தித்து வருகிறார்.
எதற்காக மும்பை செல்லும் விஜய்?
இந்த நிலையில் தேர்தலுக்கு குறைவான நாட்களே உள்ள நிலையில் அந்த கட்சியின் சார்பில் வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் விஜய் திடீரென மார்ச் 20, 2026 அன்று மும்பை செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் கட்சி நிர்வாகிகள் யாரும் செல்ல வில்லை என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து தேர்தல் பணிகளை விட்டு அவர் எதற்காக மும்பை செல்கிறார் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
இதையும் படிக்க : ரசிகர்கள் ஷாக்.. விரைவில் விஜய் டிவியில் முடிவுக்கு வரும் சீரியல்? எந்த தொடர்-னு தெரியுமா?




இந்த நிலையில் அவரது கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் சென்சார் சிக்கலில் சிக்கியுள்ள நிலையில் படத்தில் சில காட்சிகளை மாற்ற படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக படத்தில் இடம் பெற்றுள்ள அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு பதிலாக புதிய காட்சிகளை இணைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக மும்பையில் நடைபெறும் படப்பிடிப்பில் விஜய் பங்கேற்கவுள்ளதாகவும் அதற்காகவே அவர் மார்ச் 20, 2026 அன்று மாலை 7 மணியளவில் மும்பை செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சென்சார் பிரச்னைகளை சரி செய்து படத் தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளதால் இந்த முடிவெடுத்துள்ளதாகவும் விஜய் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து மும்பையில் நடைபெறும போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் விஜய் பங்கேற்கிறார். அங்கு என்ன காட்சிகள் படமாக்கப்படுகின்றன என்பது குறித்த தவகல்கள் இல்லை. மேலும் ஜனநாயகன் படப்பிடிப்புக்கு செல்வதால் அவருடன் கட்சி நிர்வாகிகள் யாரும் விஜய்யுடன் செல்லவில்லை என கூறப்படுகிறது.
இதையும் படிக்க : R Madhavan: எனக்கு மிகவும் பெருமையளிக்கிறது.. அல்லு அர்ஜுனுக்கு நன்றி தெரிவித்த ஆர்.மாதவன் பதிவு!
எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் தமிழுக்கு ஏற்ப சில மாற்றங்களை விஜய் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு அனிருத் இசைமையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது விஜய்யின் கடைசி படம் என சொல்லப்படுவதால் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.