AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒரு வழியா… ஜன நாயகன் படத்தை பார்த்து முடித்தது ரிவைசிங் கமிட்டி- விரைவில் வெளியாகும் சென்சார் அப்டேட்

Censor Revising Committee watched the Jana Nayagan film: தமிழ் சினிமாவில் மக்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு படம் ஜன நாயகன். அந்தப் படத்திற்கு சென்சார் விரைவில் கிடைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு வழியா… ஜன நாயகன் படத்தை பார்த்து முடித்தது ரிவைசிங் கமிட்டி- விரைவில் வெளியாகும் சென்சார் அப்டேட்
ஜன நாயகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Mar 2026 23:07 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர் நடிகர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக உருவாகி உள்ள படம் ஜன நாயகன். இந்தப் படத்தினை ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் படத்திற்கு உரிய நேரத்தில் சென்சார் கிடைக்காத காரணத்தால் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து இந்தப் படத்திற்கு சென்சார் கோரி படக்குழு நீதிமன்றத்தை நாடியது. ஆனால் அடுத்தடுத்து வாய்தக்கள் வந்து படத்திற்கு சென்சார் கிடைக்காமல் தொடர்ந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. இதனைத் தொடர்ந்து படக்குழு வழக்கை வாபஸ் வாங்கிவிட்டு நேரடியாக சென்சார் கோரி ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி வைத்தது. அதனைத் தொடர்ந்து அந்த ரிவைசிங் கமிட்டி படத்தைப் பார்த்து முடிவு சொல்ல தொடர்ந்து ஒத்தி வைத்துக்கொண்டே சென்றது.

முன்னதாக கடந்த வாரம் ஜன நாயகன் படத்தை பார்க்க ரிவைசிங் கமிட்டி முடிவு செய்தது. ஆனால் அன்று ரிவைசிங் கமிட்டி குழுவில் இருந்த நபருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து படத்தை பார்க்கவில்லை என்று தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து இன்று மார்ச் மாதம் 17-ம் தேதி 2026-ம் ஆண்டு ரிவைசிங் கமிட்டி படத்தைப் பார்த்து முடித்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விரைவில் வெளியாகும் ஜன நாயகன் பட சென்சார் அப்டேட்:

‘ஜனநாயகன்’ திரைப்படத்தை தணிக்கை மறுஆய்வுக் குழு இன்று பார்வையிட்டது—இறுதியாக! இக்குழு விரைவில் இத்திரைப்படம் குறித்த தங்கள் கருத்தையும், தணிக்கை வாரியத்திற்கு வழங்கப்பட வேண்டிய சான்றிதழ் குறித்த பரிந்துரையையும் அளிக்கும். இத்திரைப்படத்தை மே மாதத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். வெளியீட்டுத் தேதி எப்போது அமையும் என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Also Read… GV Prakash: ஹேப்பி ராஜ் படம் உங்களை அழவைக்கும், சிரிக்கவும் வைக்கும் – ஜி..வி. பிரகாஷ் குமார் பேச்சு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Vijay Sethupathi: ‘தேர்தல் எல்லாம் நமக்கு செட் ஆகாது சார்..! – நடிகர் விஜய் சேதுபதி பேச்சு!

Follow Us