AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நான் சந்தித்த பெண்களிலேயே மிகவும் கண்ணியமானவள் த்ரிஷா – குஷ்பு சுந்தர்

Khushbu Sundar talks about Trisha: தமிழ் சினிமா ரசிகர்களிடையே தொடர்ந்து படங்கள் தொடர்பான செய்திகள் மட்டும் வைரலாகாமல் அவர்களின் சொந்த வாழ்க்கை தொடர்பான செய்திகளும் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் த்ரிஷா கிருஷ்ணன் குறித்து குஷ்பு பேசியது வைரலாகி வருகின்றது.

நான் சந்தித்த பெண்களிலேயே மிகவும் கண்ணியமானவள் த்ரிஷா – குஷ்பு சுந்தர்
குஷ்பு சுந்தர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Mar 2026 16:13 PM IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி உலக அளவில் உள்ள சினிமா பிரபலங்களின் படங்கள் மற்றும் அது தொடர்பான செய்திகள் மக்களிடையே தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வந்தாலும் அவர்களின் சொந்த வாழ்க்கை தொடர்பான செய்திகள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி மக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. தொடர்ந்து அவர்களின் சொந்த வாழ்க்கை தொடர்பான செய்திகளை தெரிந்துகொள்ளவும் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவைப் பொருத்தவரை பிரபலங்களின் விவாகரத்து மற்றும் காதல் வாழ்க்கை என தொடர்ந்து செய்திகள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. மேலும் ஏதேனும் பொது நிகழ்ச்சிகளில் நடிகர் மற்றும் நடிகை இருவரும் ஒன்றாக கலந்துகொண்டால் அவர்கள் தொடர்பான செய்திகள் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகின்றது.

அந்த வகையில் சமீபத்தில் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி அகோரம் குடும்பத்தினர் திருமண விழாவில் நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா இருவரும் ஒன்றாக சென்று கலந்துகொண்டனர். அதற்கு முன்னதாக விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவரின் விவாகரத்து செய்தி வெளியாகி இருந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து திருமணத்தில் கலந்துகொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நான் சந்தித்த பெண்களிலேயே மிகவும் கண்ணியமானவள் த்ரிஷா:

இந்த நிலையில் அந்த திருமண விழாவிற்கு பிறகு நடிகை த்ரிஷா கிருஷ்ணன் எந்த பொது இடத்திற்கு சென்றாலும் அவரை சுற்றிக்கொண்டு செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயற்சிக்கிறார்கள். தொடர்ந்து அவரைக் குறித்த செய்திகளும் பிரபலங்களின் கருத்துகளும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் நடிகை குஷ்பு சுந்தர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அந்த பேட்டியில் நடிகை த்ரிஷா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த குஷ்பு சுந்தர் நான் சந்தித்த பெண்களிலேயே மிகவும் கண்ணியமானவள் த்ரிஷா கிருஷ்ணன் என்றும் அவர் மிகவும் அற்புதமான மனதைக் கொண்டவர் என்றும் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… உலக சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த 98வது ஆஸ்கர் விருது விழாவை எங்கு எப்போது காணலாம்?

இணையத்தில் வைரலாகும் குஷ்பு சுந்தர் பேச்சு:

Also Read… நான் பார்த்ததிலேயே மிகவும் எதார்த்தமான, இயல்பான நடிகர் ரஜினிகாந்த் – நடிகர் வசந்த் ரவி

Follow Us