நான் பார்த்ததிலேயே மிகவும் எதார்த்தமான, இயல்பான நடிகர் ரஜினிகாந்த் – நடிகர் வசந்த் ரவி
Actor Vasanth Ravi Talks About Rajinikanth Acting: உலக அளவில் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரின் நடிப்பு குறித்து நடிகர் வசந்த் ரவி பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் வசந்த் ரவி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு இயக்குநர் ராம் எழுதி இயக்கிய தரமணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் இவரது நடிப்பு பல விமர்சனங்களை சந்தித்தாலும் படத்தின் கதையின் காரணமாக படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து வசந்த் ரவி நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது. அதன்படி நடிகர் வசந்த் ரவி நடிப்பில் அடுத்தடுத்து ராக்கி, அஸ்வின்ஸ், ஜெயிலர், பொன் ஒன்று கண்டேன், வெப்பன் மற்றும் இந்திரா ஆகிய ஏழுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இவர் தொடர்ந்து நாயகனாக அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வந்தாலும் வசந்த் ரவிக்கு அதிக அளவில் பிரபலத்தை தேடித் தந்தது ஜெயிலர் படம்தான். இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகனாக நடிகர் வசந்த் ரவி நடித்து இருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் என்பதே குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் வசந்த் ரவி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பேசியது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.




நான் பார்த்ததிலேயே மிகவும் எதார்த்தமான, இயல்பான நடிகர் ரஜினிகாந்த்:
அதன்படி சமீபத்திய பேட்டியில் நடிகர் வசந்த் ரவி பேசியதாவது, வணிகத் திரைப்படங்களின் எல்லைக்குள்ளேயேகூட, நான் இதுவரை கண்டதிலேயே மிகவும் எதார்த்தமான மற்றும் இயல்பான நடிகர் ரஜினிகாந்த் ஆவார். இது உண்மையிலேயே வியக்கத்தக்கது என்று வசந்த் ரவி தெரிவித்துள்ளார். மேலும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கில் கூட ஷாட் ரெடி என்று இயக்குநர் கூறுவதற்கு முன்பு வரை அமைதியாக தியான நிலையில் இருக்கும் ரஜினிகாந்த் தனது காட்சியை மிகவும் இயல்பாக நடித்து முடிப்பார் என்றும் வசந்த் ரவி தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… Ajith Kumar: 2027ம் ஆண்டு வரை இருக்கும் அஜித் குமாரின் கார் ரேஸ்.. அப்போ AK64 பட ஷூட்டிங் எப்போது?
இணையத்தில் வைரலாகும் நடிகர் வசந்த் ரவியின் பேச்சு:
He @rajinikanth is the most realistic and natural performer I have ever seen even within the realm of commercial cinema, which is incredible ❤️✨️ – @iamvasanthravi 🙌#Jailer2 #SuperstarRajinikanth #Rajinikanth pic.twitter.com/DE6suiiS6X
— Achilles (@Searching4ligh1) March 16, 2026
Also Read… துருவ் விக்ரமை நாங்க தான் தூக்கி வளர்த்தோம்… நினைவுகளை பகிர்ந்த சசிகுமார்!