ஸ்கூல் படிக்கும் போதே ஏ.ஆர்.ரஹ்மான் சாரிடம் அதை செய்துள்ளேன் – சாய் அபயங்கர் ஓபன் டாக்
Sai Abhyankkar talks about AR Rahman: தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் இளம் இசையமைப்பாளராக வலம் வருகிறார் சாய் அபயங்கர். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலம் ஆனவர்தான் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். இவர் தமிழ் சினிமாவில் பிரபல பாடகர்களான திப்பு – ஹரிணி தம்பதியின் மகன் ஆவார். தொடர்ந்து இண்டிபெண்டண்ட் பாடல்களை எழுதி இசையமைத்து அதில் அவரே நடித்தும் வெளியிட்டு வந்தார். அந்தப் பாடல்கள் அனைத்தும் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே அதிக அளவில் பிரபலம் ஆனது. அதனைத் தொடர்ந்து சினிமாவில் இசையமைப்பாளராக சாய் அபயங்கருக்கு வாய்ப்புகள் குவிந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என அடுத்தடுத்து மொழிகளில் படங்களுக்கு இசையமைக்க வாய்ப்புகள் வரிசையாக வந்து சாய் அபயங்கருக்கு குவிந்தது குறிப்பிடத்தக்கது. இதில் சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனர் மலையாள சினிமாவில் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து தமிழில் டியூட் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இவரது இசையில் வெளியான படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து பிசியான இசையமைப்பாளராக இளம் இசையமைப்பாளராக வலம் வரும் சாய் அபயங்கர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் பள்ளியில் படிக்கும் போது ஏ.ஆர்.ரஹ்மானை எப்படி எல்லாம் தொல்லை செய்தேன் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.




ஸ்கூல் படிக்கும் போதே ஏ.ஆர்.ரஹ்மான் சாரிடம் அதை செய்துள்ளேன்:
அதன்படி அந்தப் பேட்டியில் சாய் அபயங்கர் கூறியதாவது, நான் 6 மற்றும் 7-ஆம் வகுப்புகளில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒவ்வொரு வாரமும் நான் இசையமைத்த பாடல்களைத் தொடர்ந்து மின்னஞ்சல் மூலம் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களுக்கு அனுப்பி வந்தேன். அவர் அவற்றைப் பார்த்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை. தினமும் நான் பாடல்களைப் பதிவு செய்து வந்தேன். 8-ஆம் வகுப்புக்குப் பிறகு, இசைதான் எனது உண்மையான ஆர்வம் என்பதால், எனது படிப்புக்காகப் பணம் செலவிட வேண்டாம் என்று நான் என் பெற்றோரிடம் கூறிவிட்டேன் என்று சாய் அபயங்கர் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… விக்ரம் படத்தில் அந்த காட்சியில் என்னை கேலி செய்வார்கள் என்று நினைத்தேன் – விஜய் சேதுபதி ஓபன் டாக்
இணையத்தில் வைரலாகும் சாய் அபயங்கர் பேச்சு:
#SaiAbhyankkar Recent:
“During my 6th & 7th standard of schooling, i used to spam ARRahman sir’s mail with my song composition every week 😂. I don’t think he has seen that. Daily i used to record songs. After my 8th standard I told my parents to not spend money on my studies, as… pic.twitter.com/fXFboOVFjJ— AmuthaBharathi (@CinemaWithAB) March 15, 2026
Also Read… லோகேஷ் கனகராஜ் பர்த்டே ஸ்பெஷல்… போஸ்டரை வெளியிட்ட டிசி படக்குழு!