உலக அளவில் ரீ ரிலீஸாகும் ரன்வீர் சிங்கின் துரந்தர் படம் – எப்போது தெரியுமா?
Ranveen Singhs Dhurandhar Movie Re Release Update: பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரன்வீர் சிங். இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் துரந்தர். இந்தப் படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் ரன்வீர் சிங். இவரது வித்யாசமான கதை தேர்வின் காரணமாக இந்தி சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார். தொடர்ந்து படங்களுக்காக அதிக அளவில் மெனக்கெட்டு உடல் எடையை கூட்டுவதும், குறைப்பதுமாக தொடர்ந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் வைத்து இருப்பவர்தான் நடிகர் ரன்வீர் சிங். கடந்த 2010-ம் ஆண்டு முதல் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய நடிகர் ரன்வீர் சிங் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவரது நடிப்பில் முன்னதாக வெளியான பலப் படங்கள் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் துரந்தர்.
ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் ரன்வீர் சிங் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை சாரா அர்ஜூன் நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் மாதம் 05-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் வசூலில் மட்டும் ரூபாய் 1000 கோடிக்கு அதிகமாக வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. துரந்தர் படம் வெளியாகும் போதே அதற்கு அடுத்தடுத்தப் பாகங்கள் இருப்பதும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.




உலக அளவில் ரீ ரிலீஸாகும் ரன்வீர் சிங்கின் துரந்தர் படம்:
அதன்படி இயக்குநர் ஆதித்ய தார் எழுதி இயக்கி உள்ள இந்த துரந்தர் படத்தின் இரண்டாம் பாகமான துரந்தர் தி ரிவெஞ்ச் படம் வருகின்ற 19-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் துரந்தர் படத்தின் முதல் பாகத்தை உலக அளவில் சுமார் 500 திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி 250 திரைகள் இந்தியா முழுவதும் மற்றும் வெளி நாடுகள் முழுவதிலும் 250 திரைகளில் இந்த துரந்தர் படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி படம் நாளை 13-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு ரீ ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… ஆரண்ய காண்டம் படத்தின் ரீ ரிலீஸ் ட்ரெய்லரை வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதி!
துரந்தர் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Duniya ne bola, Revenge is the state of mind! ⚔️🔥
Trailer Out Now.
Book Now for Paid Previews on 18th March only.
🔗- https://t.co/1zsWoGQOvb #DhurandharTheRevenge releases worldwide on 19 March, on Gudi Padwa, Ugadi, and Eid.Hindi | Telugu | Tamil | Kannada | Malayalam… pic.twitter.com/TDXCwFa132
— B62 Studios (@B62Studios) March 12, 2026
Also Read… 10 ஆண்டுகளை நிறைவு செய்தது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற காதலும் கடந்து போகும் படம்