AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அப்படி செய்தால் மட்டுமே தயாரிப்பாளரின் பணம் மிச்சமாகும்… தாய் கிழவி சக்சஸ் மீட்டில் ஓபனாக பேசிய சிவகார்த்திகேயன்!

Actor Sivakarthikeyan Speech at Thaai Kizhavi Movie Success Meet: தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படம் தாய் கிழவி. இந்தப் படத்தின் வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அப்படி செய்தால் மட்டுமே தயாரிப்பாளரின் பணம் மிச்சமாகும்… தாய் கிழவி சக்சஸ் மீட்டில் ஓபனாக பேசிய சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Mar 2026 16:36 PM IST

தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார்  சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது போல சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் வெளியாகும் படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. கடந்த 2018-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான கனா என்ற படத்தின் மூலமாக தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இவர் தயாரித்த முதல் படமே மாபெரும் வெற்றியைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளராக நடிகர் சிவாகர்த்திகேயன் தொடர்ந்து நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான், குரங்கு பெடல், கொட்டுக்காளி, ஹவுஸ் மேட்ஸ் என அனைத்துப் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பல ஹிட் படங்களை தயாரித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் இறுதியாக தயாரித்தப் படம் தாய் கிழவி. அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்கி இருந்த இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் சக்சஸ் மீட் இன்று சென்னையில் நடைப்பெற்றுள்ளது.

தயாரிப்பாளரின் பணம் மிச்சமாக சிவகார்த்திகேயன் கொடுத்த அட்வைஸ்:

இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, தாய் கிழவி படத்தின் கதையை நான் இரண்டு முறை கேட்டுப் படித்தேன், தினமும் படப்பிடிப்பின் போது காட்சிகளைப் பார்த்தேன், படத்தை 12 முறை பார்த்தேன். இனிமேல் நான் நடிக்கும் என் படங்களிலும் இதே நடைமுறையைப் பயன்படுத்தப் போகிறேன். நான் இதைச் செய்தால் படம் பிளாக்பஸ்டராகுமா என்று நீங்கள் கேட்பீர்கள்? ஆனால் அது என் கையில் இல்லை. இது தயாரிப்பாளரின் பணத்தை மிச்சப்படுத்தும், அவர் அதை வைத்து இன்னொரு படம் செய்வார் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… பவர் ஸ்டார் பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங் படத்தினை யார் எல்லாம் பார்க்கலாம்? வெளியானது சென்சார் அப்டேட்

இணையத்தில் வைரலாகும் நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு:

Also Read… AK is Back.. துபாயிலிருந்து பாதுகாப்பாக சென்னை திரும்பிய அஜித் குமார் – இணையத்தில் பரவும் வீடியோ!

Follow Us